65 products
65 products
65 products
Anniyanudan Oru Uraiyaadal/அந்நியனுடன் ஓர் உரையாடல்- Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 330.00
PETTIYO/பெட்டியோ-Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 600.00
Antonin Artaud-Oru Kilarchikkaranin Udal/அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்(நாடகம்) -Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 120.00
Poochi Part 2/பூச்சி பாகம் இரண்டு -Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 290.00
Poochi Part 1/பூச்சி பாகம் 1-Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 320.00
Varam/வரம்-Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 200.00
Anbu Oru Pinnaveenathuvavaathiyin Maruseeraivu Manu/அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு - Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 340.00
இப்படி ஒரு நாவல் இனிமேல் தமிழில் வருமா என்பது சந்தேகம்தான். கி.பி. 258ஆம் ஆண்டு வலேறியன் என்ற ரோமைப் பேரரசன் கிறிஸ்துவர்களை வதைத்தான். திருச்சபையின் சொத்துக்களை சூறையாட நினைத்திருந்தபோது இரண்டாம் சிக்ஸ்தூஸ் என்ற போப் திருச்சபையின் சொத்துக்களை விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்தார். சொத்துக்கள் எதையும் கைப்பற்ற முடியாத வலேறியன் இரண்டாம் சிக்ஸ்தூஸைக் கொன்றுவிடுகிறான். போப்பின் உதவியாளரான லாரன்ஸையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறான். எப்படியென்றால் இரும்புக் கட்டிலில் லாரன்ஸைப் படுக்க வைத்து, கீழே விறகை மூட்டித் தீ வைக்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸின் சதை வேக ஆரம்பிக்கிறது. ஆனால் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார் லாரன்ஸ். பின் வலேறியனைப் பார்த்து என்னுடைய ஒரு பக்கம் நன்றாக வெந்து விட்டது, வேண்டுமானால் என்னைத் திருப்பிப் போட்டு வேக வைத்துக் கொள் என்று சொன்னார் லாரன்ஸ். இப்படியான முயற்சிதான் சாருவின் இந்த நாவல்.
இந்த நாவலின் வழியாக தான் நம்பிய கோட்பாட்டிற்காக உயிரையும் துச்சமாக நினைத்து தன் சதையை வாட்டி உண்ணக் கொடுத்திருக்கிறார் சாரு. அன்பு குறித்த நம்பிக்கைகள் கட்டுடைக்கப்படும் அதிர்ச்சியுடன் இச்சமூகம் இப்புதினத்தைப் புசிக்கட்டும்.
வளன் அரசு
Naan Thaan Aurangazeb/நான் தான் ஔரங்ஸேப்- Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 1,145.00
Smashan Thara/ஸ்மாஷன் தாரா-Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 350.00
Sol Theendi pazhaghu/சொல் தீண்டிப் பழகு- Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 230.00
A-Kaalam/அ-காலம் -Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 260.00
ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்
-புத்தகத்திலிருந்து
Exile/எக்ஸைல் -Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 1,000.00
Latin America Cinema/லத்தீன் அமெரிக்க சினிமா -Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 225.00
“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. அதுவரை இல்லாத புதிய சினிமா இலக்கணத்தைக் கொண்டதாக இருந்தது. வெகுஜன சினிமா இலக்கணத்தைத் தலைகீழாக மாற்றியும், கட்டுடைப்பு செய்தும் 'புதிய' கதைகளையும் ‘புதிய' உண்மைகளையும் பேசியது. இதன் இன்னொரு முக்கியமான தன்மை, இந்தப் புதிய லத்தீன் அமெரிக்க சினிமா வெகுஜன சினிமாவுக்குரிய எந்தத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு முறைகளையும் பின்பற்ற வில்லை. சினிமாவுக்கும் பார்வையாளருக்குமான உறவுகூட இந்தப் புதிய சினிமாவில் வேறு மாதிரி இருந்தது. இந்த சினிமா மிகவும் சுதந்திரமாக இயங்கியது. தொழில் முறையிலான சினிமாவிலிருந்து விலகி விளிம்பில் இருந்தது.”
புத்தகத்திலிருந்து...
Charu Nivedita/சாரு நிவேதிதா - novels- Bundle offer
ZDP BUNDLE
Regular price Rs. 2,279.00வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்பு (Vetrulagavasiyin Diary Kurippu) - Charu Nivedita
ZDP94
Regular price Rs. 220.00சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் ஒரு பண்பாட்டுத் தனிமை கொண்ட அந்நியனின் பார்வையில் இச்சமூகத்தின் அபத்தங்களை விமர்சிக்கின்றன. அந்த வகையில் பொதுபுத்திக்கு எதிரான கலகக் குரல் என்று அவரைச் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களையும் விநோதங்களையும் பெரும் குதூகலத்துடன் பதிவு செய்கிறது அவர் எழுத்து.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 150
Language: Tamil
ரெண்டாம் ஆட்டம் (Rendam Attam) - Charu Nivedita
ZDP42
Regular price Rs. 200.00“அழகியல் என்பது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும், தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது. இன்று தமிழில் பல கலை இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும், தூய சிந்தனைக் கிளர்ச்சிகளையும் உருவாக்கி உன்னதமான மனிதன், உன்னதமான சமூகம், உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவதாக நம்புகிறார்கள். எனவே தங்களது அழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில், அதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. தங்களது வாழ்வையே உன்னத அழகியலின்படி உன்னதப் படைப்புகளை உருவாக்கி உலகை உன்னதப்படுத்த அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாய் இவர்கள் நம்புவதால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டதாய் உணர்கிறார்கள். மதம் எப்படி கொலைக் கருவியாய் செயல்படுகிறதோ அதேபோல் அழகியலும் ஒரு கொலைக் கருவிதான் என்றால் அது இவர்களுக்குப் புரிவதுமில்லை; அதைச் சகிக்கும் ஆற்றலுமில்லை.”
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 136
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் மூன்று (Paluppunira Pakkangal – Part 3) - Charu Nivedita
ZDP43
Regular price Rs. 350.00“என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன்.”
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil
அறம் பொருள் இன்பம் (Aram Porul Inbam) - Charu Nivedita
ZDP40
Regular price Rs. 350.00“நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம், புறம் இரண்டையும் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன். இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களினால் உருவாக்கப்பட்ட நான், பல நூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த மொழியின் கரையில் அமர்ந்திருக்கிறேன். கனவு, நனவு, நனவில் கனவு, கனவில் நனவு ஆகிய திசைகளின் வழியே காற்றில் மிதந்து என் மூதாதையரின் பாடலைக் கேட்கப் பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் உருவாகும் பித்தநிலையையே எழுத்து எனப் பெயரிட்டு சக மனிதனுக்கு வழங்குகிறேன்.”
Author: Charu Nivedita
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 262
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு (Paluppunira Pakkangal – Part 2) - Charu Nivedita
ZDP39
Regular price Rs. 350.00கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 234
Language: Tamil
மெதுஸாவின் மதுக்கோப்பை/Medusaavin Madhukoppai - சாரு நிவேதிதா/Charu Nivedita
ZDP44
Regular price Rs. 350.00சாருவின் ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு...
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 246
Language: Tamil
திசை அறியும் பறவைகள் (Thesay Ariyum Paravaigal) - Charu Nivedita
ZDP45
Regular price Rs. 350.00இத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages:270
Language: Tamil
மழையா பெய்கிறது(Mazhaiya Peigiradhu) - Charu Nivedita
ZDP59
Regular price Rs. 280.00சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகளின் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை.
அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கோள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 194
Language: Tamil
கெட்ட வார்த்தை(Ketta Vaarthai) - Charu Nivedita
ZDP58
Regular price Rs. 340.00சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 324
Language: Tamil
தீராக்காதலி(Theerakadhali) - Charu Nivedita
ZDP57
Regular price Rs. 230.00தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 152
Language: Tamil
இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) - Charu Nivedita
ZDP56
Regular price Rs. 150.00கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.
Author: Charu Nivedita
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 114
Language: Tamil
அதிகாரம் அமைதி சுதந்திரம் (Adhigaram Amaithi Suthandhiram) - Charu Nivedita
ZDP54
Regular price Rs. 150.00நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை.அந்த சிதனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை, ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்லுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்...யாரையும் எதையும் நம்பாதீர்கள். உங்களை நப்புங்கள். உங்களைப் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 90
Language: Tamil
நாடோடியின் நாட்குறிப்புகள் (Naadodiyin Naatkuripu) - Charu Nivedita
ZDP53
Regular price Rs. 200.00ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே!” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது. -புத்தகத்திலிருந்து
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 156
Language: Tamil
கனவுகளின் நடனம்(Kanavugalin Nadanam) - Charu Nivedita
ZDP61
Regular price Rs. 250.00கலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன்.
எம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன்று தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. அந்த இடத்தை ஒரு விமர்சகனாக இட்டு நிரப்புகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 192
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more