உங்களுக்கு ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவா? அந்தக் கனவைக் கைப்பற்றுவதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லித் தருவதே இந்த நூலின் நோக்கம்.
ஆண்டுதோறும் தோராயமாகப் பதினாறாயிரம் மாணவர்கள் ஐஐடியில் சேர்க்கைத் தகுதி பெறுகிறார்கள். இதில் தமிழ் மாணவர்கள் வெறும் ஐந்நூறு பேர்.
ஆனால் ஐஐடி ஒன்றும் மாய மந்திரக் கோட்டை அல்ல. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் சாமானியர்கள் கூட ஐஐடி கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும். அதற்கு வழி காட்டுகிறது இந்நூல்.