உண்மையும் தைரியமும் நிறைந்த எழுத்து பராங்குசம் அவர்களின் தனிச்சிறப்பு. இவர் அச்சுக்காக எழுதியது மிகவும் குறைவு. இவருடைய சிறுகதைகள் கலாமோகினி, சிவாஜி, சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தேனீ முதலியவற்றிலே வெளிவந்தன. வெங்கட்ராமன் தனிமனிதனின் ஏக்கங்களோடு விளையாடுபவர். கிருத்திகா தனிமனிதன் சமுதாயத்தில் போலி ஆசாரங்களிலிருந்து விடுபடும் திணறலைச் சித்தரிப்பவர். பராங்குசம் சமூகத்தைத் தனிமனிதன் உருவாக்க முடியும், திருத்த முடியும், அழகுறச்செய்ய முடியும், இப்பொழுதைவிடப் பண்பும் பயனுமுள்ளதாக வாழச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டவர். அவருடைய எழுத்தில் இந்த நம்பிக்கை விரவிக் கிடக்கிறது. சிலசமயம் கணிப்பாக ஒலிக்கிறது. இதைக் காணும்பொழுது முந்திய இருவரையும்விட பாரத இலக்கியப் பண்பு இவரிடம் ஓங்கியிருக்கிறது என்பதை உணர முடியும். - தி.ஜானகிராமன்
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more