ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே 'மூத்த அகதி' நாவலை எழுதி முடித்திருக்கிறேன். உலகில் மிகவும் துயரமானது எது என்று கேட்டால், 'ஒரு அகதி தன்னுடைய வாழ்வியல் துயர்களை விளக்கி கூற முயல்வது' என்றே கருதுகிறேன். அகதி வாழ்வை எழுத முயல்வது கூட அதற்கு நிகரானதுதான். எவ்வளவு முயன்றாலும் அதை விளக்கி விட முடியாது. அதை அகதியாக இருக்கும் ஒருவனால்தான் உணர முடியும். நான் ஏன் பதட்டமாகிறேன்? நான் ஏன் பலகீனமாக உணர்கிறேன்? நான் ஏன் ஒதுங்கி கொள்கிறேன்? இப்படி எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில் தான் இருக்கிறது. 'என் பெயர் அகதி' என்பதுதான் அந்தப் பதில்.
- வாசு முருகவேல்
Puthiran/புத்திரன் -Vasu Murugavel/வாசு முருகவேல்
Regular priceRs. 170.00
/
பிறந்த மண்ணை விடப் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்? உயிர் வாழ்வதற்காக தாய் நிலத்தை பிரிந்த அகதி ஒருவன் இப்படிச் சொல்வது முரணாக இருக்கலாம். இந்த வலி நிரம்பிய முரண்தான் என்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வும்.
- வாசு முருகவேல்
Attachments area
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more