577 products
577 products
577 products
பேய்த்திணை (Peithinai) - Mounan Yathrika
ZDP143
Regular price Rs. 99.00தம் வாழ்வையும் நிலங்களையும் பொருளற்ற சுகத்திற்காக அடமானம் வைத்த அப்பாவி மற்றும் அடப்பாவி மனிதர்களை நினைக்கும்போதெல்லாம் எழுதத்தூண்டும் பேருணர்ச்சிகள் இப்போது வருகின்றன. பேய்த்திணை வந்தபோது அப்படியெல்லாம் ஒன்று தோன்றியதில்லை. அது தன்னைச் சுற்றிய வட்டத்துக்குள் ஒளிர்ந்த வாழ்வையும் கணங்களையும் கொண்டிருந்தது.
Author: Mounan Yathrika
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 73
Language: Tamil
பானர் வகையறா (Banar Vagaiyara) - Mounan Yathrika
ZDP149
Regular price Rs. 130.00சங்க காலத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகக் கட்டமைக்கப்பட்ட கூட்டு நனவிலி தமிழ் மனம் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளில் அழகியலாக மலர்கிறது. இவருடைய கவிதைகளில் பாணரும் விரலியரும் கூத்தருமாகச் சுற்றி நின்று குரவைக் கூத்து ஆடுகிறார்கள். தொல்காப்பியர் பேசும் திணைக் கோட்பாடு சார்ந்த தமிழ் வாழ்க்கையின் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்க்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவினக் கவிதைகள் பேசுகின்றன.
மொத்தத்தில் இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதத் தீவிர வாசகனால் உணர முடியும்.
Author: Mounan Yathrika
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (Aadivasigal Nilathil Bonsai) - Kayal
ZDP142
Regular price Rs. 130.00பிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.
நேசமித்திரன்
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 96
Language: Tamil
உயிரளபெடை (Uyiralabedai) - Kayal
ZDP147
Regular price Rs. 130.00கவிதைத் தொகுப்பு
Author: Kayal
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
அத்தாரோ (Atharo) - Saravanan Chandran
ZDP162
Regular price Rs. 230.00அத்தாரோ மலையின் அடியாழத்தில் உறைந்து துளிர்விடுகிற,
அறிந்தேயிராத கிழங்கொன்றின் கண்களை நோக்கி முண்டித்
துளைத்துப் போகிற விலங்கொன்றின் கதை. அறியாதவைகள்
குறித்த பிரமைகளோடு நுழையும் ஒருவன் தன்னை வனமகனாய்
உணரும் கணத்தில் என்னவாக மாறுகிறான்? இந்த
ஒட்டுமொத்தத்தின் மேல் நின்று ஓயாத கேள்விகளை எழுப்புகிறது
அத்தாரோ நாவல். ஒட்டுமொத்தமும் மிதக்கிற பந்தில்,
பரவியிருக்கிற அதனதன் எல்லைகளை மறுவிசாரணை செய்து,
பிரபஞ்ச ரகசியமொன்றைக் கண்டறிய முயல்கிறார் சரவணன்
Author: Saravanan Chandran
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 166
Language: Tamil
நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) - Kutti Revathi
ZDP127
Regular price Rs. 199.00நிறைய அறைகள் உள்ள வீடு
குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்பமான பல்வேறு இழைகள் ஊடாடும் புனைகதைகளால் இத்தொகுப்பு உருவெடுத்திருக்கிறது. ஒடுக்கப்படுதலின் துயரமும், தனிமையும் தோய்ந்த பெண் வெளியைக் கலைத்து கொண்டாட்டமானதோர் உயிர் வெளியைக் கட்டமைக்கிறது. அழகியலும் அரசியலும் இணைந்து முயங்கும் அலாதியான இரசவாதம் இது.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 154
Language: Tamil
விரல்கள் (Viralgal) - Kutti Revathi
ZDP126
Regular price Rs. 150.00யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள், கதைக்களத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை. பெண், ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை, முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இக்கதைகள் கண்டறிந்து சொல்கின்றன. மிச்சமிருக்கும் நம்பிக்கைகள் இதுவரை இழந்த நம்பிக்கைகளை விட மேலானவை என்று முணுமுணுக்கின்றன. மனம் இயங்கும் தீவிரத் தளத்திலிருந்து எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் இல்லாமல் தாமே வெளியே வந்து குதித்த பூனைகளாய் இருக்கின்றன இக்கதைகள்.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 128
Language: Tamil
குட்டி ரேவதி கவிதைகள் -தொகுதி 2 - ( Kutti Revathi Kavithaigal -2) - Kutti Revathi
ZDP100
Regular price Rs. 550.00குட்டி ரேவதி கவிதைகள், சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன; கோபம் கொள்கின்றன; வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும் போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை வெகு இயல்பாகப் படிமமாக்கிக் காட்டும் அழகியல் ஆகியவற்றால் தனித்து நிற்கின்றன. ஆணால் வடிவமைக்கப்பட்டு பெண்ணுக்கு வழங்கப்பட்ட பெண் சிந்தனையைப் பார்த்து கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. புதிய சொல்லாட்சிகளும், புதுப்புது
சொல்லிணைகளும், மின் தெறிப்பாய்த் தெரிந்து மறையும் படிமங்களும் இக்கவிதைகளை நினைவு கூருமாறு செய்கின்றன. உத்வேகத்துடன் அலைவுறும் கவிதை மனமும் விடுதலை வேட்கையும் படிமங்களால் அழகாகக் கைகோர்க்கின்றன. இயல்பான தன்மையுடன் நடனமாடுகின்றன.
நவீன தமிழ்க்கவிதை வெளியில் பெண் குரல், பெண் உடல், உடலரசியல் ஆகிய தளங்களில் ஒலிக்கும் ஏக்கம், நிராசை, காமம், மரணம், ஆற்றல், பரவசம், எழுச்சி, போராட்டம் போன்ற அனுபூதிகளால் குட்டி ரேவதி கவிதைகள் சாகாவரம் பெற்று இயங்குகின்றன. இயற்கையின் மீதான அவதானிப்பு, பெண்ணியத்தின் குறியீடுகளாக மிளிர்கின்றன. பெண்ணிட மிருந்து விலக்கப்பட்ட சொற்களைத் துணிந்து உச்சரிக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு பெண்ணின் உடலாகவும், ஒரு பெண்ணின் உடலையே பிரபஞ்சமாகவும் உருவகித்துக் காட்டுகின்றன. கவிதை தோறும் படிமங்களும், தொடர் உருவகங்களும் காட்டாற்று வெள்ளமாய்ப் பிரவகித்துப் பாய்கின்றன. பின், வெள்ளம் வடிந்ததும் படியும் நுரையாய் மனத்தில் ஒட்டிக் கொள்கின்றன. கவிதையில் உற்பவிக்கும் உணர்ச்சிப் பெருக்கும் எழுச்சியும் கவிஞரிடமிருந்து வாசகனையும் தொற்றிக் கொள்கின்றன. உடலையே இயக்கமாக்கி அதை அதன் ஆதி நிலைக்குத் திருப்புகின்றன. தொல் அறத்தை மீட்டெடுக்கின்றன. வரலாற்றிலிருந்து உடலின் விடுதலை என்பது மோதலில் மட்டுமே நிகழ முடியும். அத்தகைய மோதலின் உக்கிரமான ஒரு புள்ளியிலிருந்து இக்கவிதைகள் பீறிடுகின்றன.
Author: Kutti Revathi
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 478
Language: Tamil
குட்டி ரேவதி கவிதைகள் - தொகுதி 1 ( Kutti Revathi Kavithaigal -1) - Kutti Revathi
ZDP99
Regular price Rs. 599.00செயலின்பம், விடுதலை ஊக்கம், அழகு என்னும் பேறுநிலை – இவை குட்டி ரேவதி கவிதைகளின் நித்திய அகவிசைகள். இந்தியச் சூழலில் வர்ணமயப்படுத்தப்பட்ட சாதியுடலை, சமூக, பால்நிலை – அதிகார மரபுகள் வழி வரையறுக்கப்பட்ட மொழியுடலை இக்கவிதைகள் மற்றமைகள் நோக்கி, பேரண்டம் நோக்கி – விடுதலை செய்கின்றன. ஒரு தனிப்பட்ட சுயத்தின் குரலாக அல்லாமல், தன்னிலிருந்து ஆதிப் பெண் வரையான புதைப்படிவங்கள் தேடி, பெண் எனும் மொத்தப் பிரபஞ்சத்தின் கூட்டு உடல்களையும் அதன் அறிதல்களையும் அகழ்ந்து வருகின்றன. காதல், புணர்ச்சி
எல்லாம் வரலாற்று கதியிலிருந்து விடுவிக்கப்பட்டு இயற்கையின் ஞானத்திலும் இசைமையிலும் வைக்கப்பட்டுள்ளன. சூரியன், கடல், வானம் எனப் பிரபஞ்சத்தின் பூரணத்துவம் வாய்ந்த நித்திய படிமங்களோடு இக்கவிதைகள் வேட்கையுடன் உரையாடுகின்றன. சூழலியல், ஈழம், மானுட உரிமைகள் எனக் காலத்தின் சமூக உடலாகி வலியும் மீட்சியும் கொண்டு துடிக்கின்றன. குட்டி ரேவதி கவிதைகளின் மொத்தத் தொகுப்பான இந்த நூல், காலத்தின் மீதான அதிர்வு என்பதாக மட்டுமல்லாது தன்னளவில் நிறைவான மாற்று மெய்ம்மையை, ஒரு மெய்த்தளத்தை உருவாக்கியுள்ளது.
Author: Kutti Revathi
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 514
Language: Tamil
மீமொழி (Meemozhi) - Kutti Revathi
ZDP160
Regular price Rs. 135.00என் கதைமாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக் கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். புத்தெழுச்சியும் நுண்மொழியும் இக்கதைமாந்தர்களின் அகப்புலன்களாகி, வாழ்வின் போதாமையை புலன் கடந்து வெல்லப் பார்க்கின்றனர். ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின் இது என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 82
Language: Tamil
பாலை நிலப் பயணம் (Palai Nila Payanam) - Selventhiran
ZDP161
Regular price Rs. 120.00நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று – ஜெயமோகன்
Author: Selventhiran
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 92
Language: Tamil
வாசிப்பது எப்படி? (Vaasipathu Epadi) - Selventhiran
ZDP163
Regular price Rs. 125.00வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
Author: Selventhiran
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 82
Language: Tamil
ஆட்கொல்லி (Aatkolli) - Ka. Na. Subramaniam
ZDP157
Regular price Rs. 120.00க. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 94
Language: Tamil
ஒரு நாள் (Oru Naal) - Ka. Na. Subramaniam
ZDP156
Regular price Rs. 200.00க. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 174
Language: Tamil
அசுரகணம் (Asuraganan) - Ka. Na. Subramaniam
ZDP155
Regular price Rs. 120.00க. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
வாழ்ந்தவர் கெட்டால் (Vaazhdhavar Kettal) - Ka. Na. Subramaniam
ZDP154
Regular price Rs. 100.00க. நா. சு. வின் எல்லா நாவல்களும் படு சுவாரசியமாகவும், எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ் சூழலில் முழுனேர எழுத்தாளனாக வாழ்வதன் அவலத்தைத் தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடிகயோடு விவரிக்கிறார் க. நா. சு. பரவலாக பல லட்சம்பேர் படிக்கக்கூடியதாககவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க. நா. சு. வின் நாவல்கள்.
Author: Ka. Na. Subramaniam
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 82
Language: Tamil
பின்னங்களின் பேரசைவு (Pinnangalin Perasaivu) - Nesamithran
ZDP76
Regular price Rs. 150.00உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில், உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக ‘பின்னங்களின் பேரசைவு’ தொகுக்கப்பட்டிருக்கிறது.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 116
Language: Tamil
துடிக்கூத்து (Thudikuthu) - Nesamithran
ZDP75
Regular price Rs. 130.00நம்மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அடுக்குகளைக் கீழறுப்பு செய்யத் தேவையானக் கவிதையாடல்களை நேசமித்ரன் கவிதைகள் அளிக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 112
Language: Tamil
நன்னயம் (Nannayam) - Nesamithran
ZDP74
Regular price Rs. 130.00சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச் சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். என் தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும். இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான் எனக்குக் காணக் கிடைக்கிறார். அவர் நேசமித்ரன்.
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
அயல் மகரந்தச் சேர்க்கை (Ayal Magrantha Serkai) - Nesamithran
ZDP73
Regular price Rs. 300.00ஒரு கணிணிக்கு முற்-பிற் புறம் ‘அவன்’ மற்றும் ‘அவள்’ இடையேயான வேட்கை பரிமாற்ற்ம் பிக்சல்களின் மறுசேர்க்கையிலும் டெசிபல்களின் சரக்கோர்வையாலும் இணைவு ஏற்படுகிறது. இக்கவிதைகள் நகர்மிகைகளின் கதையாடலை முன்வைக்கின்றன.
-எஸ். சண்முகம்
Author: Nesamithran
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 226
Language: Tamil
வல்லபி (Vallabi) - Thenmozhi Das
ZDP60
Regular price Rs. 150.00தேன்மொழி தாஸின் கவிதை தொகுப்பான வல்லபியை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் .
காடே பேரறிவு
சுடுகாடே பேழ்
காலம் கடலாணி
வானவேர் மாயை
புலரி நிலப்பூண்
அறம் வேட்கை
வைராக்கியம் வேகும் எலும்பு
காத்திருத்தல் வாழ்வைப் பழக்குதல்
Author: Thenmozhi Das
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 108
Language: Tamil
மஞ்சள் நிறப் பைத்தியங்கள் (Manjal Nira Paithiyangal) - S. Senthilkumar
ZDP168
Regular price Rs. 190.00காலமும் வெளியும் தன்னை அந்தரங்கமாக விசிறியைப் போல ஒன்றையொன்று மறைத்துக் கொண்டுள்ளது. நடந்து முடிந்த காலத்தின் இருப்பிடம் ஓர் ஸ்தூலமாகவே அமைந்திருப்பதற்குப் பதிலாக வரைபடம் போல கதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு வகையில் அதன் சிறப்பம்சமே.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 138
Language: Tamil
விலகிச் செல்லும் பருவம் (Vilagi Sellum Paruvam) - S. Senthil Kumar
ZDP167
Regular price Rs. 190.00செந்தில்குமாரின் கதைவெளி நுட்பமானது. வாழ்வின் எல்லா ரகசியங்களையும் தமக்குள் ஒளித்துவைத்துக்கொண்டிருப்பவை அவரது பாத்திரங்கள். அந்த ரகசியங்களை அறிந்துகொள்ளும் வேட்கையே அவரது படைப்புச் செயல். வாழ்வை அதன் கடைசித் துளிவரைப் பருகத் துடிக்கும் தன் பாத்திரங்களை அமைதியாகப் பின்தொடர்ந்து செல்லும் செந்தில்குமார் ஒருபோதும் அவற்றின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. வாழ்வின் சுமை தாளாத தருணங்களில் அவை விடும் பெருமூச்சுகளை, ரகசியமான புணர்ச்சியின்போது அவை கசியவிடும் வியர்வைத் துளிகளை, கொடிய வன்முறைக்குள்ளாகிப் பெற்றுள்ள காயங்களிலிருந்து பெருகும் குருதியை, வதைபடும் ஆன்மாவிலிருந்து சொட்டும் கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தி எடுத்து வந்துவிடுகிறார் செந்தில்குமார். தன் அறிதலை மிகத் தணிந்த குரலில் வாசகனிடம் பகிர்ந்துகொள்ளும் முனைப்பே அவரது படைப்புச் செயல்பாடு. எளிய வெதுவெதுப்பான சொற்களால் வாசிப்பனுபவத்தைத் திணறலாக மாற்றும் வித்தை அவருக்குக் கைகூடியிருப்பதன் ரகசியம் இதுவே.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 138
Language: Tamil
மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி (Mazhaiku Pin Purappadum Rail Vandi) - S. Senthil Kumar
ZDP166
Regular price Rs. 200.00சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும் தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள்தான் இவை.
நாவலின் அடிப்படையான குணாம்சங்களின் துணையோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலுக்குரிய தோற்றத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இக்கதைகளின் கதாபாத்திரங்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தையும் காலத்தையும் கூடவே அதன் தன்மைகளையும் பிரதிபலிக்கின்றன.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 144
Language: Tamil
கழுதைப்பாதை (Kazhudhai Pathai) - S. Senthil Kumar
ZDP107
Regular price Rs. 375.00கழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்திப் புண்ணை அறுத்தது. புண்ணிற்குப் பக்கத்திலும் புண்ணின் மேலும் கயிறு அறுத்த தடம் விழுந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கழுதையின் புட்டத்தில் கயிறுகட்டு அழுத்தி அழுத்தி வேதனையை உண்டாக்கியது. வலியை பொறுத்துக் கொண்ட கழுதைகள், மேடேறும் தோரணை அலாதியானது. கம்பீரமானது. அதே சமயம் சோகமானது; வேதனையானது. மூவண்ணா சொல்லியது உண்மைதான். ‘மனுஷ வாழ்க்கையும் கழுதை வாழ்க்கையும் ஒன்றுதான். மனுஷனைப்போலத் தான் கழுதையும்’.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 324
Language: Tamil
தற்கொலைக் கவிதைகள் (Tharkkolai Kavithaigal) - Araathu
ZDP151
Regular price Rs. 120.00பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி
சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன்
ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும்
புல்டோசர். கரப்பான் பூச்சிகள், காகங்கள், பூரான்கள், வண்ணத்துப் பூச்சிகள்,
வெட்டுக்கிளிகள் போன்ற உயிரிகள் மட்டும் இவரிடம் சற்று இரக்கம் பெறுகின்றன!
வரம் தரும் கடவுளில் இருந்து பாரில் மட்டையாகும் இளம்பெண் வரை எல்லாருக்கும்
ஒரே ட்ரீட்மெண்ட்!
-அசோகன் நாகமுத்து
Author: Araathu
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 106
Language: Tamil
சிறுகதை- சிறுகதை குறித்த கட்டுரைகள் (Sirukathai - Sirukathia Kuritha Katturaigal) - S. Senthil Kumar
ZDP152
Regular price Rs. 330.00ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த்தங்களைத் தருகிறது. புதிய வாசிப்பின் தேவையை நேர்மையுடன் பரிசீலனை செய்கிறது.
தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் சிறுகதை குறித்த கட்டுரை அடங்கிய நூல் இது. இக்கட்டுரைகளை வாசித்து, பிறகு, சிறுகதைகளை வாசிப்பவர்கள் ‘சிறுகதையை ஏன் வாசிக்க வேண்டும்?’ என மறுபரிசீலனை செய்யத் தொடங்கும் போது கிடைக்கும் வெளிச்சங்கள் அர்த்தப்பூர்வமானதாக மாறும்.
Author: S. Senthilkumar
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 296
Language: Tamil
ஓங்கி உயர ஆசை - (Oongi Uyara Asai) - Paraman Pachaimuthu
ZDP41
Regular price Rs. 200.00தினமலரில் இரண்டு ஆண்டுகளாக வெளிவந்து மக்களிடையே பேராதரவை பெற்ற பரமனின் சுயமுன்னேற்ற கட்டுரை தொகுப்புகளை, ஓங்கி உயர ஆசை என்ற தலைப்பில், புத்தகமாக வெளியிடுவதில் எழுத்து பிரசுரம் பெரு மகிழ்ச்சி அடைகிறது.
Author: Paraman Pachaimuthu
Genre: Religion/Spirituality/Self-Help
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 144
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more