523 products
சிறுகதை- சிறுகதை குறித்த கட்டுரைகள் (Sirukathai - Sirukathia Kuritha Katturaigal) - S. Senthil Kumar
ZDP152
Regular price Rs. 330.00 Sale price Rs. 280.00 Save 15%ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த்தங்களைத் தருகிறது. புதிய வாசிப்பின் தேவையை நேர்மையுடன் பரிசீலனை செய்கிறது.
தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் சிறுகதை குறித்த கட்டுரை அடங்கிய நூல் இது. இக்கட்டுரைகளை வாசித்து, பிறகு, சிறுகதைகளை வாசிப்பவர்கள் ‘சிறுகதையை ஏன் வாசிக்க வேண்டும்?’ என மறுபரிசீலனை செய்யத் தொடங்கும் போது கிடைக்கும் வெளிச்சங்கள் அர்த்தப்பூர்வமானதாக மாறும்.
Author: S. Senthilkumar
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 296
Language: Tamil
ஓங்கி உயர ஆசை - (Oongi Uyara Asai) - Paraman Pachaimuthu
ZDP41
Regular price Rs. 200.00 Sale price Rs. 170.00 Save 15%தினமலரில் இரண்டு ஆண்டுகளாக வெளிவந்து மக்களிடையே பேராதரவை பெற்ற பரமனின் சுயமுன்னேற்ற கட்டுரை தொகுப்புகளை, ஓங்கி உயர ஆசை என்ற தலைப்பில், புத்தகமாக வெளியிடுவதில் எழுத்து பிரசுரம் பெரு மகிழ்ச்சி அடைகிறது.
Author: Paraman Pachaimuthu
Genre: Religion/Spirituality/Self-Help
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 144
Language: Tamil
அராஜகம் ஆயிரம் (Araajagam Ayiram) - Araathu
ZDP158
Regular price Rs. 200.00உயிர்மெய் (Uyirmei) - Araathu
ZDP138
Regular price Rs. 400.00தற்போது காதலிக்கும் பெரும்பாலானோர் ஒத்த வயதுடையவர்கள். பழங்காலம் போல பெண் ஆணை விட நான்கைந்து வயது குறைவாக இருப்பதில்லை. ஆணை விட பெண்ணுக்கு குறைந்த வயதிலேயே மெச்சூரிட்டி வந்து விடுகிறது. ஒரே வயதில் காதலிப்பவர்களின் பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. சம வயது என்பதால் ஈகோ அதிகம் தலையெடுத்து ஆடுகிறது. தன் வயதொத்த ஆணை முதிர்ச்சியற்றவனாக பார்க்கிறாள் பெண். இது தெரியாமல் அதிகாரம் செய்து கொண்டிருக்கிறான் ஆண்.—
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 354
Language: Tamil
இங்கு பஞ்சர் போடப்படும் (Ingu Puncture Podappadum) - Araathu
ZDP137
Regular price Rs. 130.00உங்களுக்குப் பிடிக்காத பெண்ணை வீட்டில் கட்டி வைக்கப் பார்க்கிறார்கள் என்றால் ’என்ஃபீல்ட் புல்லட் வாங்கிக் கொடுத்தால் தான் கல்யாணம் பண்ணுவேன்’ எனச் சொல்லிவிடுங்கள். கழுத்துக்கு வந்தது என்ஃபீல்டோடு போய்விடும்.
Author: Araathu
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 90
Language: Tamil
சயனைட் குறுங்கதைகள் (Cyanide Kurunkathaigal) - Araathu
ZDP136
Regular price Rs. 300.00தற்கொலை குறுங்கதைகள் நாவலுக்குப்பின், அதன் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் , வேறொரு ஸ்டைலில் எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தது சயனைட் குறுங்கதைகள். இதுவரை தமிழ்ப் புதினங்கள் கண்டு கொள்ளாத தருணங்கள் , தவற விட்ட கதைகள், முக்கியத்துவம் இல்லாத நிகழ்வுகள் போன்றவைகளை எடுத்து முயற்சித்துப் பார்த்ததுதான் சயனைட் குறுங்கதைகள்.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 240
Language: Tamil
வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்பு (Vetrulagavasiyin Diary Kurippu) - Charu Nivedita
ZDP94
Regular price Rs. 220.00சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் ஒரு பண்பாட்டுத் தனிமை கொண்ட அந்நியனின் பார்வையில் இச்சமூகத்தின் அபத்தங்களை விமர்சிக்கின்றன. அந்த வகையில் பொதுபுத்திக்கு எதிரான கலகக் குரல் என்று அவரைச் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களையும் விநோதங்களையும் பெரும் குதூகலத்துடன் பதிவு செய்கிறது அவர் எழுத்து.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 150
Language: Tamil
பாலும் மீன்களுமே வாங்கிக் கொண்டிருந்தவள் (Paalum Meengalum Vaangi Kondirundhaval) - Iyappa Madhavan
ZDP144
Regular price Rs. 100.00 Sale price Rs. 85.00 Save 15%அய்யப்பமாதவன் கதைகள் கிராமக் கூட்டுக்குடும்ப வாழ்வினின்றும் பயணமாகி பெரு நகரத்தில் தனிக்குடும்பமாய் ஸ்டோர் வீடுகள் எனும் எதிரெதிர் வாசல் கதவுகளினுள்ளே வாழும் பல தரப்பட்ட மனிதர்களீனூடாக உழல்பவை.
அங்கிருந்து வெளியேறி தத்தம் இருத்தலை நகர நெரிசலுக்குள் புழங்கி மீண்டு தங்களின் வாடகைக் குடியிருப்புகளுக்கான தனித்துவத்தையும் பேணிக்கொள்பவை.
-யவனிகா ஸ்ரீராம்
Author: Iyappa Madhavan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 88
Language: Tamil
ரெண்டாம் ஆட்டம் (Rendam Attam) - Charu Nivedita
ZDP42
Regular price Rs. 200.00“அழகியல் என்பது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும், தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது. இன்று தமிழில் பல கலை இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும், தூய சிந்தனைக் கிளர்ச்சிகளையும் உருவாக்கி உன்னதமான மனிதன், உன்னதமான சமூகம், உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவதாக நம்புகிறார்கள். எனவே தங்களது அழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில், அதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. தங்களது வாழ்வையே உன்னத அழகியலின்படி உன்னதப் படைப்புகளை உருவாக்கி உலகை உன்னதப்படுத்த அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாய் இவர்கள் நம்புவதால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டதாய் உணர்கிறார்கள். மதம் எப்படி கொலைக் கருவியாய் செயல்படுகிறதோ அதேபோல் அழகியலும் ஒரு கொலைக் கருவிதான் என்றால் அது இவர்களுக்குப் புரிவதுமில்லை; அதைச் சகிக்கும் ஆற்றலுமில்லை.”
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 136
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் மூன்று (Paluppunira Pakkangal – Part 3) - Charu Nivedita
ZDP43
Regular price Rs. 350.00“என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன்.”
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil
அறம் பொருள் இன்பம் (Aram Porul Inbam) - Charu Nivedita
ZDP40
Regular price Rs. 350.00“நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம், புறம் இரண்டையும் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன். இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களினால் உருவாக்கப்பட்ட நான், பல நூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த மொழியின் கரையில் அமர்ந்திருக்கிறேன். கனவு, நனவு, நனவில் கனவு, கனவில் நனவு ஆகிய திசைகளின் வழியே காற்றில் மிதந்து என் மூதாதையரின் பாடலைக் கேட்கப் பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் உருவாகும் பித்தநிலையையே எழுத்து எனப் பெயரிட்டு சக மனிதனுக்கு வழங்குகிறேன்.”
Author: Charu Nivedita
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 262
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு (Paluppunira Pakkangal – Part 2) - Charu Nivedita
ZDP39
Regular price Rs. 350.00கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 234
Language: Tamil
மெதுஸாவின் மதுக்கோப்பை/Medusaavin Madhukoppai - சாரு நிவேதிதா/Charu Nivedita
ZDP44
Regular price Rs. 350.00சாருவின் ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு...
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 246
Language: Tamil
திசை அறியும் பறவைகள் (Thesay Ariyum Paravaigal) - Charu Nivedita
ZDP45
Regular price Rs. 350.00இத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages:270
Language: Tamil
மழையா பெய்கிறது(Mazhaiya Peigiradhu) - Charu Nivedita
ZDP59
Regular price Rs. 280.00சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகளின் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை.
அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கோள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 194
Language: Tamil
கெட்ட வார்த்தை(Ketta Vaarthai) - Charu Nivedita
ZDP58
Regular price Rs. 340.00சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 324
Language: Tamil
தீராக்காதலி(Theerakadhali) - Charu Nivedita
ZDP57
Regular price Rs. 230.00தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 152
Language: Tamil
இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) - Charu Nivedita
ZDP56
Regular price Rs. 150.00கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.
Author: Charu Nivedita
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 114
Language: Tamil
அதிகாரம் அமைதி சுதந்திரம் (Adhigaram Amaithi Suthandhiram) - Charu Nivedita
ZDP54
Regular price Rs. 150.00நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை.அந்த சிதனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை, ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்லுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்...யாரையும் எதையும் நம்பாதீர்கள். உங்களை நப்புங்கள். உங்களைப் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 90
Language: Tamil
நாடோடியின் நாட்குறிப்புகள் (Naadodiyin Naatkuripu) - Charu Nivedita
ZDP53
Regular price Rs. 200.00ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே!” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது. -புத்தகத்திலிருந்து
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 156
Language: Tamil
கனவுகளின் நடனம்(Kanavugalin Nadanam) - Charu Nivedita
ZDP61
Regular price Rs. 250.00கலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன்.
எம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன்று தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. அந்த இடத்தை ஒரு விமர்சகனாக இட்டு நிரப்புகிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.
Author: Charu Nivedita
Genre: Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 192
Language: Tamil
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி (Shakesphearein Minnajal) - Charu Nivedita
ZDP82
Regular price Rs. 120.00சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதையின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறையைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்தியேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரங்களை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்கின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 94
Language: Tamil
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்-2 (Kananvu Cappucino Koncham Chatting -2) - Charu Nivedita
ZDP81
Regular price Rs. 300.001922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது!
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 244
Language: Tamil
சினிமா சினிமா (Cinema Cinema) - Charu Nivedita
ZDP80
Regular price Rs. 200.00சாரு நிவேதிதா 2008ஆம் ஆண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மிகவும் பேசப்பட்ட பல படங்கள் பற்றிய உடனடியான விமர்சனங்களைப் பதிவு செய்து வந்திருக்கும் சாரு நிவேதிதா, சினிமாவின் அழகியல் மற்றும் அவை பேசும் மதிப்பீடுகள் குறித்து இக்கட்டுரைகளில் துல்லியமாக தன் பார்வைகளை முன்வைக்கிறார்.
Author: Charu Nivedita
Genre: Non-Film/Drama/Music
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 138
Language: Tamil
கடவுளும் சைத்தானும் (Kadavulum Saithanum) - Charu Nivedita
ZDP84
Regular price Rs. 130.00சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை.
குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என
பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 100
Language: Tamil
மூடுபனிச் சாலை (Moodupani Salai) - Charu Nivedita
ZDP85
Regular price Rs. 260.00கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால்,
சல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூகச் சித்திரங்கள் உருவாகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 154
Language: Tamil
கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் (Kanavugalin Mozhipeyarppalan) - Charu Nivedita
ZDP86
Regular price Rs. 250.00சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து அசோகமித்திரன் வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 194
Language: Tamil
தாந்தேயின் சிறுத்தை (Danteyin Siruthai) - Charu Nivedita
ZDP63
Regular price Rs. 340.00கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 282
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more