86 products
86 products
86 products
Kizhavanin Kathali/கிழவனின் காதலி -Mounan Yathrika/மௌனன் யாத்ரிகா
Regular price Rs. 170.00
Si.Su.Sellappa Padaippugal/சி. சு. செல்லப்பா படைப்புகள் -சி. சு. செல்லப்பா
Regular price Rs. 650.00
Usha Subramanian Kathaigal/உஷா சுப்பிரமணியன் கதைகள்
Regular price Rs. 590.00
Konashtai Padaippugal/கொனஷ்டை படைப்புகள்-தொகுப்பாசிரியர் -Rani Thilak/ராணி திலக்
Regular price Rs. 370.00
கொனஷ்டை இயற்பெயர் S.G. ஸ்ரீநிவாஸாச்சாரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள செருக்கை என்னும் சிறு கிராமமாகும். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஆர். சூடாமணி தனக்கான தமிழை இவ்வரிடமிருந்து பெற்றுள்ளார். தற்போது இவரின் இரண்டாம் புத்தகம் மட்டும் வந்துள்ளது. இத்தொகுதியில், கதை, கட்டுரை இடம் பெற்றுள்ளன. விரைவில் அவருடைய முதல் புத்தகம் வெளியாகும்.
இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளராக கருதப்படுகிறார். ஹாஸ்யக் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.
Aroo ariviyal sirukathaigal 2020/அரூ அறிவியல் சிறுகதைகள் 2020
Regular price Rs. 320.00
தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை அறிந்திராத உலகங்களைக் காண்பிக்கின்றது. அந்த வகையில் உள்ள 15 கதைகளும் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை.
சாரு நிவேதிதா
Aroo Ariviyal sirukathaigal 2019/அரூ அறிவியல் சிறுகதைகள் 2019
Regular price Rs. 280.00
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
-ஜெயமோகன்
மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறு மாதிரியானவை. இந்திய/ தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.
-சுனில் கிருஷ்ணன்
Azhiyadha Regaigal/அழியாத ரேகைகள் -Sudha Murthy/சுதா மூர்த்தி-தமிழில் -Gayathri R/காயத்ரி ஆர்
300
Regular price Rs. 250.00சுதா மூர்த்தியின் 200வது புத்தகம் இது.
என் நண்பர்களின் கதைகளாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்தின், தெரிந்தவர்களின் கதைகளாக இருந்தாலும் சரி, என்னுடைய கதைகளில் நான் வியாபித்து இருப்பேன். ஏனென்றால் அதை அனுபவம் செய்தவள் என்ற முறையில் என்னை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எனக்குப் பிடித்த அழகான மலர்களைப் போல் இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் நான் மிகவும் போற்றும் அனுபவங்கள். இவை எல்லாவற்றையும் தொடுத்து ஒரு மாலையாக இங்கு கொடுத்திருக்கிறேன்.
Mudhal Kathai/முதல் கதை -(தொகுப்பாசிரியர்- லக்ஷ்மி சரவணகுமார் )
205
Regular price Rs. 150.00Naagavelvi/நாகவேள்வி -.S.Arulselvaperarasan/செ.அருட்செல்வப்பேரரசன்
204
Regular price Rs. 250.00Yuga Dharmam/யுக தர்மம் -Selvaraj Jegadeesan/செல்வராஜ் ஜெகதீசன்
193
Regular price Rs. 200.00KADALIL ERINDHAVAI/கடலில் எறிந்தவை -யுவன் சந்திரசேகர்
189
Regular price Rs. 260.00…அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்:
இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே.
இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன?
மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க் கப்போனால், இந்தமாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலி ஆவார்...
அதிகாரி சிரித்தாராம்….
-’அடையாளம்’ கதையிலிருந்து.
போர்க்குதிரை /PORKUTHIRAI-லக்ஷ்மி சரவணகுமார்
184
Regular price Rs. 260.00கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும் சமூகத்திற்கென கலைஞன் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். இலக்குகளை நோக்கி ஓடுகிறவர்களுக்கு லட்சியம் என்பது தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமில்லை என்பதைத் திரும்ப திரும்ப உணர்த்த வேண்டியுள்ளது. இலக்கிய வாசிப்புதான் இலக்குகளைத் துரத்தும் மனிதர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ’மனித செயல்பாடுகள் அனைத்தின் அர்த்தமும் கலைரீதீலான பிரக்ஞையில்தான் இருக்கிறது.’ என்னும் தார்க்கோவ்ஸ்கியின் கூற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
இயக்கம்/Iyakkam- Kutti Revathi/குட்டி ரேவதி
ZDP 178
Regular price Rs. 140.00இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் பெண்ணிய கற்பனையின் உச்சம். பெண்ணின் இயக்கத்தை முதன்மையாக வைத்து வாழ்க்கையையும் உலகத்தையும்காலத்தையும் பரிமாணம் உணரமுடியுமானால், எல்லாமே வேறு வகையானவாழ்க்கையாகவும் பேரண்டம் கையளிக்கும் அற்புதங்கள் இன்னும் திடமானவையாகவும் காலத்தின் தளம் ஒவ்வொரு கணமும் தன் கைகளுக்குள் மலர்பவையாகவும் இருக்கக்கூடும். பெண் ஆண் இடையே சமத்துவத்தை அன்று, ஏற்றத்தாழ்வுகளற்ற வேறுபட்ட புரிதல்களை நோக்கி அழைத்துச் செல்லும் இயக்கத்தை முன்மொழியும் கதாபாத்திரங்களைத் தேடி நகரும் கதைகள் இவை. இயக்கங்களுக்குள் பெண் ஆணுக்குள் அடங்குபவை இல்லை, பாலியல் வெளிகளும்அரசியல் ஊக்கங்களும். குடும்பம், காதல், திருமணம், இரத்த உறவுகளுக்கு அப்பால்சமூக உறவுகளால் பிணைந்தெழும்பும் இயக்கத்தைத் தேடும் அறச்சுவடுகளால் ஆனப் பயணங்கள் கொண்டபவை.
சி.சு. செல்லப்பா சிறுகதைகள் (Si Su Sellappa Kathaigal) - Si. Su. Chellappa
ZDP101
Regular price Rs. 800.00முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிக்கைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கைக் குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
Author: Si. Su. Chellappa
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 700
Language: Tamil
அதே கதை மீண்டும் ஒரு முறை (Adhe Kathai Meendum Oru Murai) - Sripathy Padmanabha
ZDP71
Regular price Rs. 220.00நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது.
அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது
Author: Sripathy Padmanabha
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 164
Language: Tamil
சூரியகாந்தி (Sooriyagandhi) - N. Chidambara Subramanian
ZDP89
Regular price Rs. 150.00“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.
மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.”
சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந்த வார்த்தைகளுக்குத்
தன் எழுத்தின் மூலமாக உதாரணமாகத் திகழ்ந்தவர் ந. சிதம்பரசுப்பிரமணியன்.
Author: N. Chidambara Subramanian
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 148
Language: Tamil
நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) - Kutti Revathi
ZDP127
Regular price Rs. 199.00நிறைய அறைகள் உள்ள வீடு
குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்பமான பல்வேறு இழைகள் ஊடாடும் புனைகதைகளால் இத்தொகுப்பு உருவெடுத்திருக்கிறது. ஒடுக்கப்படுதலின் துயரமும், தனிமையும் தோய்ந்த பெண் வெளியைக் கலைத்து கொண்டாட்டமானதோர் உயிர் வெளியைக் கட்டமைக்கிறது. அழகியலும் அரசியலும் இணைந்து முயங்கும் அலாதியான இரசவாதம் இது.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 154
Language: Tamil
விரல்கள் (Viralgal) - Kutti Revathi
ZDP126
Regular price Rs. 150.00யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள், கதைக்களத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை. பெண், ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை, முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இக்கதைகள் கண்டறிந்து சொல்கின்றன. மிச்சமிருக்கும் நம்பிக்கைகள் இதுவரை இழந்த நம்பிக்கைகளை விட மேலானவை என்று முணுமுணுக்கின்றன. மனம் இயங்கும் தீவிரத் தளத்திலிருந்து எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் இல்லாமல் தாமே வெளியே வந்து குதித்த பூனைகளாய் இருக்கின்றன இக்கதைகள்.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 128
Language: Tamil
மீமொழி (Meemozhi) - Kutti Revathi
ZDP160
Regular price Rs. 135.00என் கதைமாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக் கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். புத்தெழுச்சியும் நுண்மொழியும் இக்கதைமாந்தர்களின் அகப்புலன்களாகி, வாழ்வின் போதாமையை புலன் கடந்து வெல்லப் பார்க்கின்றனர். ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின் இது என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 82
Language: Tamil
மஞ்சள் நிறப் பைத்தியங்கள் (Manjal Nira Paithiyangal) - S. Senthilkumar
ZDP168
Regular price Rs. 190.00காலமும் வெளியும் தன்னை அந்தரங்கமாக விசிறியைப் போல ஒன்றையொன்று மறைத்துக் கொண்டுள்ளது. நடந்து முடிந்த காலத்தின் இருப்பிடம் ஓர் ஸ்தூலமாகவே அமைந்திருப்பதற்குப் பதிலாக வரைபடம் போல கதைகளில் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு வகையில் அதன் சிறப்பம்சமே.
Author: S. Senthilkumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 138
Language: Tamil
நேநோ (Nano) - Charu Nivedita
ZDP135
Regular price Rs. 400.00இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால இயந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியான ஒரு கரு.
- சாரு நிவேதிதா
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 330
Language: Tamil
ஊரின் மிக அழகான பெண் (Oorin Miga Azhagana Pen) - Charu Nivedita
ZDP164
Regular price Rs. 350.00ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உலகின் பிரபலமான சிறுகதைத் தொகுதிகளில் பார்க்க முடியாத அரிதினும் அரிதான கதைகள். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட பனாமாவைச் சேர்ந்த ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) என்பவரைப் பற்றித் தெரிந்திருக்காது. ஏனென்றால், லத்தீன் அமெரிக்கச் சூழலிலேயே அதிகம் விவாதிக்கப்படாதவர் அவர். தமிழ்ச் சூழலில் தி.ஜ.ரங்கநாதன், ப.சிங்காரம், நகுலன் போல் வைத்துக் கொள்ளுங்களேன். ரொஹேலியோ சினான் பற்றி இணையத்தில் தேடினால்கூட மூணு வரி தான் போட்டிருக்கும். இவர்களைப் பற்றியெல்லாம் நான் கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த Granma என்ற வாரப் பத்திரிகையிலிருந்து தெரிந்து கொண்டேன். டேப்ளாய்ட் அளவில் வரும் அந்தப் பத்திரிகை. இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத தென்னமெரிக்கக் கதைகளை முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார்கள் அப்பத்திரிகையில். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை பிரபலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் தொகுப்பிலேயே கூட பார்க்க இயலாது.
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 302
Language: Tamil
குட்டிகோரா (Cutticora) - Therisai Siva
ZDP55
Regular price Rs. 200.00எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்.நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கைதமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் வாழ்க்கையின் நிகழ்வுகைளை நிறுத்தியுள்ளேன். நான் என்பது யாரோ...
ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை
விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படேவா, கோபப்படேவா வைக்கலாம். இதில் எது நடந்தாலும் மகிழ்ச்சி.
-தெரிசை சிவா
Author: Therisai Siva
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 160
Language: Tamil
தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் (Tholaindhupona Siriya Alavilane Karuppu Nira Bible) - Sadhana
ZDP36
Regular price Rs. 120.00“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.
இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.”
-சாரு நிவேதிதா
Author: Sadhana
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 98
Language: Tamil
முள்ளம்பன்றிகளின் விடுதி (Mullampandrigalin Viduthi) - Ayyanar Viswanath
ZDP120
Regular price Rs. 170.00முள்ளம்பன்றிகளின் விடுதி-அய்யனார் விஸ்வநாத்/ ayyanar -short stories
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொடர்கள் அதற்கு உதாரணம். இந்த narrative புரட்சி தற்காலத்திய எழுத்தில் அவ்வளவாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது.
சாரு நிவேதிதா
Author: Ayyanar Viswanath
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 148
Language: Tamil
சேராக் காதலில் சேர வந்தவன் (Sera Kathalil Sera Vandhavan) - Aathmaarthi
ZDP108
Regular price Rs. 120.00கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
டைமண்ட் ராணி (Diamond Rani) - Aathmaarthi
ZDP35
Regular price Rs. 150.00இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினு டனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள். கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல்.
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) - Araathu
ZDP113
Regular price Rs. 325.00தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இதைச் செய்திருக்கிறார். தமிழ்ப் புனைக்கதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டி கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.
சாரு நிவேதிதா
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 252
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more