
Nagamani/நாகமணி-N.Chidambarasubramanian/ந. சிதம்பரசுப்ரமண்யன்
Regular price Rs. 140.00
/
சிலப்பதிகாரம் என் நெஞ்சையும் அள்ளிய நூல். புகார் நகரத்தின் செழுமையும் வலிமையும், அக்காலத்துத் தமிழரின் பண்பாடும், வாழ்ந்த நிலையும் யாரைத்தான் பெருமையடையச் செய்யாது! புகார் நகரத்தையும் இந்திர விழாவையும் வைத்து ஒரு கதை கற்பனை செய்யவேண்டுமென்பது என் வெகு நாளைய அவா. அதற்கு இந்தக் கதையின் மூலக்கற்பனை இடங் கொடுத்தது. ஆகவே, இந்த நாகமணியை நம் தமிழ் நாகரிகத்தில் வைத்துப் பதித்தேன். என்ன தான், நாம் பட்டை தீர்த்து, அழகான கட்டிடத்தில் பதித்தாலும் போலி வைரம் உண்மை வைரம் ஆகாது. இரண்டும் எலக்ட்ரிக் வெளிச்சத்தில் 'டால்' அடிக்கலாம். ஆனாலும் போலி போலிதான் உண்மை உண்மைதான். இலக்கியத்திற்கு அடிப்படை, எழுத்தின் வளமும், உணர்ச்சியின் ஆழமும். இவ்விரண்டும் வலுத்து விட்டால் அதன் இலக்கியத் தன்மை வலுத்து விடுகிறது.
- ந. சிதம்பரசுப்ரமண்யன்