Velinaadugalil MBBS/வெளிநாடுகளில் MBBS-Prabhu Bala/பிரபு பாலா

Velinaadugalil MBBS/வெளிநாடுகளில் MBBS-Prabhu Bala/பிரபு பாலா

Regular price Rs. 150.00
/

Only -7 items in stock!
இந்தியாவில் ஆண்டுதோறும் இருபது லட்சம் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க விரும்பி நுழைவுத் தேர்வு நீட் எழுதுகிறார்கள். அவர்களில் பதினொரு லட்சம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி பெறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் இடங்கள் மட்டுமே உள்ளன. பொருளாதாரத்தில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், பல லட்சம் அல்லது சில கோடிகள் கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாது. இதற்கு ஒரே மாற்று வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க வெளிநாடு செல்கிறார்கள். வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை கூடும். அதிகமான இந்திய மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் இருபது நாடுகள், அங்குள்ள முக்கிய மருத்துவப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பில் சேர தகுதிகள், கட்டண விவரங்கள், சவால்கள் அனைத்தையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
இந்தியாவின் முன்னணித் தரவு மேலாண்மை நிறுவனத்தில் தமிழ்நாடு மண்டல மேலாளராகப் பணிபுரியும் பிரபு பாலசுப்ரமணியம் IIT கனவுகள் புத்தகத்திற்கு அடுத்து எழுதியிருக்கும் இரண்டாவது புத்தகம். வெளிநாடுகளில் MBBS. மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதுகிறார்.