
Oru Thundu Rail/ஒரு துண்டு ரயில் - Neyveli Bharathikumar/நெய்வேலி பாரதிக்குமார்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்? என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் புன்னகையுடன் பதில் சொன்னேன். ஒரு ஐம்பது அல்லது, நூறு பேர் முழுமையாக வாசிக்கக் கூடும். அவர்கள் அபாரம் என்கிறார்கள். குழுக்களின் மிகப்பெரும் திரளில் இருந்து, அவர்களின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு வரும் ஒரே ஒரு அபாரம் எனக்குப் போதுமானதாக இருக்கிறது. ஹோமியோ மருந்தின் ஒரு சிறு உருண்டை மிகப்பெரும் வியாதியைச் சரிசெய்வது போல அச்சொல் அத்தனை புறக்கணிப்புகளையும், காழ்ப்புகளையும் கரைத்துக் குடித்துவிடுகிறது. நான் பூரண குணமடைகிறேன். ஆனால் என்னுடைய தீவிர வாசகன் இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்தோ அல்லது நூறு வருடங்கள் கழித்தோ வாசித்துக் கொண்டாடி பிரம்மிக்கலாம். அப்பொழுது என் இன்றைய சமகால பெரும் எழுத்தாளர்கள் அறிவிக்கும் பட்டியல் இருந்த இடம் தெரியாமல் மண்ணாகி இருக்கலாம். ஒருவேளை அந்தப் பட்டியலை உருவாக்கியவர்களும்கூட காணாமல் போயிருக்கலாம் என்று சொன்னேன்.
அப்படியானால் நான் யாருக்காக எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு என்னுடைய பதில் விருப்பு வெறுப்பின்றி ‘அற்புதம்’ என்று எழும் அந்த அப்பழுக்கற்ற குரல்களுக்காக எழுதுகிறேன். எனக்குத் தெரியும் அவை மிக வலிமையான குரல்கள் என்று... அந்தக் குரல்களைத் தேடி ஒரு துண்டு ரயில் என்கிற இந்த ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
- Literature and Fiction
- Ezutthu Prachuram
- Tamil