Kaattupalli/காட்டுப்பள்ளி-Araathu/அராத்து

Kaattupalli/காட்டுப்பள்ளி-Araathu/அராத்து

Regular price Rs. 140.00
/

Only -21 items in stock!
தொடர்ந்து டி.வி. பார்ப்பதால், குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி அடியோடு பாதிக்கப்படும். வாசிப்புப் பழக்கம் மட்டுமே சிறு வயதில் குழந்தையின் கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்தும், வளர்க்க உதவும்.
கதை கேட்டல் மற்றும் கதை படித்தல் இரண்டும் சொந்த சிந்தனைக்கும், கிரியேட்டிவிட்டிக்கும் பயங்கரமாகத் தீனி போடும் விஷயங்கள். ஒரு குழந்தை, புத்தகத்தைப் படித்து அதில் இருப்பதை சொந்தமாகக் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
குழந்தைகளை வாசிப்புப் பழக்கத்தின்பால் ஈர்க்கும் பொருட்டு, நாம் அன்றாடம் பேசும் மொழியிலும், குழந்தைகளின் கொச்சை மொழியிலும் இந்த நாவலை எழுதினேன். ஒரு தாத்தாவோ அல்லது பாட்டியோ தங்கள் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்கையில் எந்த மொழியில், எந்தப் பாணியில் சொல்வார்களோ, அதே முறையில் எழுதி இருக்கிறேன்.
இதைப் படிக்கும் குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டியே வந்து கதை சொல்வதுபோல எண்ணிக்கொள்வார்கள்.
இந்த நாவல் குழந்தைகள் மட்டும் படிக்க அல்ல. பெரியவர்களும் படித்துக் கொஞ்சம் குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ளலாம். தாங்கள் படித்ததை அப்படியே குழந்தைக்குச் சொல்லலாம் அல்லது சத்தம் போட்டு குழந்தைக்கு எதிரிலேயே படித்துக் காட்டலாம்.
வாருங்கள், குழந்தைகளின் மாயாஜால உலகத்திற்குள் நுழையலாம்.
- அராத்து