Kaatrinile Varum Geetham/காற்றினிலே வரும் கீதம்-Ramanan/ரமணன்

Kaatrinile Varum Geetham/காற்றினிலே வரும் கீதம்-Ramanan/ரமணன்

Regular priceRs. 210.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
இதோ உங்கள் கையிலிருக்கும் புத்தகத்தில் நீங்கள் ஒரு சினிமா (biopic) பார்க்கலாம். கற்பனை செய்யும் திறமை என்றெல்லாம் தனியே எதுவும்  வேண்டாம். வெறுமனே படித்துக் கொண்டே வாருங்கள். உங்கள் மனதில் காட்சிகள் தானே விரியும். அப்படி ஒரு எழுத்து நடை.
அப்படி ஒரு வாழ்க்கையும் கூட.! மனைவி என்ற அந்தஸ்தைப் பெறாத தாய், அவருக்கு ஒரு சாதனைப் பெண், அந்தக் குழந்தைக்காகத் தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் அம்மா, மகளுக்கு அந்த அன்னையின் மீது மட்டற்ற பாசம் ஆனால் அதே நேரத்தில் கைவிடமுடியாத காதல், பெறாத குழந்தையைப் பேணி வளர்க்கும் தாய், எதிர்பாராத சினிமா பிரவேசம், அதில் இமாலய வெற்றி, வெற்றியைத் தொடர்ந்து விலகல், உலகப் புகழ், தேசத்தின் உச்ச பட்ச விருது, அநாதை இல்லங்களுக்கு வாரி வாரிக் கொடுத்த கை சொந்த வீடு இல்லாமல் நொடிக்கும் துயரம், அந்த நேரத்தில் அவர் மீது பொழியப்படும்  ஆண்டவன் அருள்!
இதை திரையில் பார்க்க நேர்ந்தால் பார்ப்பவர்கள் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்வார்கள்.  இந்தப் புத்தகம் வார்த்தைகளால் அமைந்த ஒரு பயோபிக். A verbal biopic. தமிழுக்கு இது ஒரு புதுவகை
- மாலன்
  • Non-Fiction
  • ZDP Specifics
  • Tamil

Recently viewed