Google/கூகுள்-N.Chokkan/என். சொக்கன்

Google/கூகுள்-N.Chokkan/என். சொக்கன்

Regular priceRs. 260.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
இணையத்தின் #1 தேடல் இயந்திரம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் விறுவிறுப்பான வெற்றிக்கதை!
இன்றைக்கு நாம் எதைத் தேடுவதென்றாலும் முதலில் கூகுளுக்குதான் ஓடுகிறோம். எங்கேனும் செல்வதென்றால் கூகுள் மேப்ஸிடம் வழி கேட்கிறோம். நம்முடைய புகைப்படங்கள் அனைத்தும் கூகுள் போட்டோஸில் அமர்ந்திருக்கின்றன. திரைப்படம், தொலைக்காட்சி, கல்வி என அனைத்துக்கும் யூட்யூபைச் சார்ந்திருக்கிறோம். ஈமெயில் என்றாலே ஜிமெயில்தான் என்றாகிவிட்டது... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் ஒட்டுமொத்த உலகத்தையும் இப்படி வளைத்துப்போட்டதில்லை.
கூகுள் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது?
இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது, எப்படி வந்தது?
அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்?
அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்?
கூகுளின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை கூகுள் பெற்றிருப்பது எப்படி?
வருங்காலத்தில் கூகுள் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்?
... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள், கூகுளின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள்: ஃபேஸ்புக்: வெற்றிக்கதை, ட்விட்டர்: வெற்றிக்கதை

  • Non-Fiction
  • ZDP Specifics
  • Tamil

Recently viewed