Exile/எக்ஸைல் -Charu Nivedita/சாரு நிவேதிதா - View 1

Exile/எக்ஸைல் -Charu Nivedita/சாரு நிவேதிதா

Regular price Rs. 1,000.00 Sale price Rs. 850.00 Save 15%
/

Only 106 items in stock!
Autofiction என்ற இலக்கிய வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள்.  இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு.  நடையும் விவரணங்களும் baroque பாணியில் அமைந்திருக்கின்றன.  ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டிடக் கலை.  உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகே உள்ள பிந்து நதியின் கரையிலிருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம்.  இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் அந்த மயன் மாளிகைக்கு ஒப்பானவை.

சாரு நிவேதிதாவின் வழக்கமான பாணியில் இல்லாமல் செவ்வியல் மரபில் எழுதப்பட்ட இந்த நாவல் ஐயாயிரம் ஆண்டுகள் நீண்ட தமிழர்களின் ஞான மரபை அகத்தியர், தேரையர், தொல்காப்பியரிலிருந்து தொடங்கி, இன்றைய முள்ளிவாய்க்கால் வரை ஆவணப்படுத்துகிறது.  

மரம், செடி, கொடி, பாம்பு, யானை, எலி, பூனை, நாய், பல்லி, குரங்கு, மீன் என்று பல்லுயிர்களையும் பேசும் இந்த நாவலில் மனித வர்க்கத்தைப் பற்றி மிகக் குறைவாகவே காண முடியும்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற சித்தன் வாக்கு வெகு சுவாரசியமான நடையில் நாவலாக விரிந்திருக்கிறது.  இந்தப் பக்கங்களில் இதை ஒரு நாவலாகவும் ஒருவர் வாசிக்கலாம். வாழ்க்கை பற்றிய ஒரு வழிகாட்டி நூலாகவும் கொள்ளலாம்.