Anbudai Nenjam/அன்புடை நெஞ்சம் -N.Chokkan/என்.சொக்கன்
Regular priceRs. 260.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
அகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அழகாகப் பதிவுசெய்வதால், எப்போது, எங்கிருந்து வாசித்தாலும் அந்தக் காதலர்களுக்குச் சற்றே நெருங்கிவிடுவதுபோலவும், அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிநின்று அந்த அன்பை ரசிப்பதுபோலவும் தோன்றும். நமது அன்புக்குரியவர்களை நினைக்கவைக்கும்.
சங்க இலக்கியத்தில் தொடங்கிய இந்த மரபை, அதன்பிறகு பல கவிஞர்கள், இன்றைய திரைப்பாடலாசிரியர்கள் வரை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதற்காக இவர்கள் எல்லாரும் ஒரே தரத்தில் எழுதுகிறார்கள் என்பது அர்த்தமில்லை. அதேசமயம், அன்பைப் பதிவுசெய்யும் மகிழ்ச்சியும், அதை ரசிக்கிற அனுபவமும் நமக்கு நிறையக் கிடைத்திருக்கிறது, அப்போதும் நம் மனம் நிறையாமல் இன்னும் வேண்டும் என்று கேட்கிறது. அதுவே அன்பின் இயல்பு.
முக்கியமாக, இந்நூல் முழுக்க நிறைந்திருக்கும் காதலை வழங்கிய காதலர்களுக்கும், கவிஞர்களுக்கும், இனி காதலித்துக்கொண்டே இருக்கப்போகிற எல்லாருக்கும் நன்றி!

- Poetry
- Ezutthu Prachuram
- Tamil