மாவோயிஸ்ட்/Maoist-Pa. Raghavan/பா. ராகவன்

மாவோயிஸ்ட்/Maoist-Pa. Raghavan/பா. ராகவன்

Regular price Rs. 160.00
/

Only 348 items in stock!
மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூல் அலசுகிறது.

அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின் மீது பட்டவர்த்தனமாகப் போர்ப் பிரகடனம் செய்யும் துணிச்சல் மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் ஆகப் பெரும் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளை வருணிக்கிறது இந்திய அரசு. இந்தியாவின் முதன்மையான விரோதி என்று அரசாங்கத்தை அழைக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.

யார் இவர்கள்?

நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி, தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறை இந்நூலில் கண்முன் நிறுத்துகிறார் பா. ராகவன்.