Twitter/ ட்விட்டர் -N.Chokkan/என். சொக்கன்

Twitter/ ட்விட்டர் -N.Chokkan/என். சொக்கன்

Regular price Rs. 145.00
/

Only 398 items in stock!
இணையத்தின் #1 தகவல் பரிமாற்றத் தளம், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரின் விறுவிறுப்பான வெற்றிக்கதை!
இன்றைக்கு இணையதளங்கள், செய்தித் தாள்கள், தொலைக்காட்சிச் சேனல்களையெல்லாம்விட மிக விரைவாகச் செய்திகளை நமக்குக் கொண்டுவருகிற தளம், ட்விட்டர்தான். வெறும் செய்திகள்மட்டுமில்லை, வெவ்வேறு கோணங்களில் அதற்கான விமர்சனங்கள், பல்வேறு துறைச் சாதனையாளர்களுடைய கருத்துகள் என்று ட்விட்டர் தருகிற வாசிப்புச் சுகம் வேறெங்கும் நமக்குக் கிடைப்பதில்லை. இவை அனைத்தும் சில சொற்களுக்குள் எழுதப்படுகின்றன என்பதுதான் ட்விட்டரை இன்னும் சுவையான சமூக ஊடகமாக்குகிறது... வரலாற்றில் வேறு எந்த நிறுவனமும் நம்முடைய சிந்தனையை, எழுத்தை, தகவல்களைப் பரிமாறிக்கொள்கிற விதத்தை இப்படி மாற்றியமைத்ததில்லை.
ட்விட்டர் என்ற நிறுவனம் எப்படித் தொடங்கியது?
இப்படியொரு சிந்தனை யாருக்கு முதலில் வந்தது, எப்படி வந்தது?
அதை இத்தனை பெரிய நிறுவனமாக ஆக்குவதில் அவர்களுக்கு உதவியவர்கள் யார் யார்?
அவர்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன? அவற்றை எப்படிச் சமாளித்து முன்னேறினார்கள்?
ட்விட்டரின் போட்டியாளர்கள் யார் யார்? மற்றவர்களுக்குச் சாத்தியமாகாத ஒரு வெற்றியை ட்விட்டர் பெற்றிருப்பது எப்படி?
வருங்காலத்தில் ட்விட்டர் எப்படி வளரும்? என்னவெல்லாம் செய்யும்?
... இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விறுவிறுப்பான மொழியில் சான்றுகளுடன் பதிலளிக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம். வாங்கிப் படியுங்கள், ட்விட்டரின் வெற்றிக்கதையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வரிசையில் என். சொக்கனின் மற்ற நூல்கள்: கூகுள்: வெற்றிக்கதை, ஃபேஸ்புக்: வெற்றிக்கதை
Get Flat 15% off at checkout