Arupaththu Ezhavadhu Adi/அறுபத்து ஏழாவது அடி- Suresh Raina/சுரேஷ் ரெய்னா/Bharath Sundaresan/பரத் சுந்தரேசன்/Thamaraiselvi/தாமரைச்செல்வி

Arupaththu Ezhavadhu Adi/அறுபத்து ஏழாவது அடி- Suresh Raina/சுரேஷ் ரெய்னா/Bharath Sundaresan/பரத் சுந்தரேசன்/Thamaraiselvi/தாமரைச்செல்வி

Regular price Rs. 270.00
/

Only 97 items in stock!
Believe - நம்பிக்கை கொள் என்று சச்சின் தெண்டுல்கர் ரெய்னாவிடம் சொன்னார், அவரோ அதைத் தன் உள்ளத்தில் சுமந்து, அந்தச் சொல்லையே தன் கையில் டாட்டூவாகப் பச்சை குத்திக்கொண்டார்.
ஓர் இளம் கிரிக்கெட் வீரராகத் தான் சந்தித்த சவால்களை இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பள்ளியிலும், கிரிக்கெட் பயிற்சி மையங்களிலும் அச்சுறுத்தல், துன்புறுத்தல்களை எதிர்கொண்டார். ஆனால் தனக்கு மீறிய வலுவுடன் அவற்றைக் கையாண்டார், வாழ்க்கை தன் பக்கம் வீசிய அத்தனை சங்கடங்களையும் சமாளித்தார், ஒருபோதும் தன் போராட்டத்தைக் கைவிடவில்லை. இது அவர் கற்ற பாடங்கள் மற்றும் பெற்ற தோழமைகளைப் பற்றிய கதை.
கிரிக்கெட் பற்றியும் வாழ்க்கை பற்றியும் எம்.எஸ்.தோனி, ராகுல் த்ராவிட், அனில் கும்ப்ளே, சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்கூலி போன்ற சீனியர் வீரர்களிடமிருந்து தான் கற்ற விலைமதிப்பற்ற நுணுக்கங்களை இந்தப் புத்தகம் முழுக்கப் பதிவு செய்திருக்கிறார். இந்தப் புத்தகம் உழைப்பு, அன்பு, அதிர்ஷ்டம், நம்பிக்கை மற்றும் தோழமை மீது மிகுந்த மதிப்பை உண்டாகும்.
கண் முன்னே தன் உலகம் உடைந்து நொறுங்குவதைப் பார்த்த பின்னும், வெள்ளை பந்து கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவான ஒரு மனிதரின் கிரிக்கெட் வாழ்க்கையில் தோன்றிய மேடு பள்ளங்களின் ஊடாக ஓர் அற்புதமான பயணம் இது.