
Mun Pakkangal /முன் பக்கங்கள் -Muthu Selvan /முத்துச்செல்வன்
Regular price Rs. 290.00
/
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை
வெகுஜன எழுத்திலும் தீவிர எழுத்தின் சாயலை புகுத்தலாம்.ஆனால் தீவிர எழுத்தின் சாயல் என்றும் தீவிர எழுத்தின் சாயல்தான். இரண்டிலும் நிஜத்தின் தரிசனம் இருந்தால் வாசிப்பவனின் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். சாதி, அரசியல், வாழ்வாதாரம், பின்னிப்பிணைந்து வரும் காமம் என சாதாரணனின் வாழ்க்கை உலகமயமாதலின் பின்னணியில் புனைவாக விரிகிறது. இதில் உள்ளோடி வரும் வரிகள் எல்லோருக்குள்ளும் மறைந்திருக்கும் உண்மை. வெளிப்பூச்சுக்கு மறுத்தாலும் யாரும் அதை அவ்வளவு எளிதாக மறைத்து விட முடியாது. காலம் தன் கணக்கை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கும். உண்மைகளை பேசும்போது எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். அதிகாரத்துக்கு அடிபணிந்து எழுதுபவன் கலைஞனல்ல. புனைவு எப்போது தன்னைத்தான் குறிப்பிடுகிறதோ என தனி மனிதனையும் சமூகத்தையும் நினைக்க வைக்கிறதோ அப்போதே அது காலத்தால் அழியாத நிலையை பெற்றுவிடுகிறது.
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை