Arabic kadalil /அரபிக் கடலில்-C.P.Raja/சி. பி. ராஜா

Arabic kadalil /அரபிக் கடலில்-C.P.Raja/சி. பி. ராஜா

Regular price Rs. 180.00
/

Only 1000 items in stock!
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை

சிறு சிறு வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு முற்றிலும் கற்பனையாக இந்த நாவல் பயணிக்கிறது.  முதல் பயணம் கத்தாரின் பூர்வகுடியான கால்நடை மேய்க்கும் நாசர் நண்பர்களுடன், ஜுபாரா நகருக்குத் தன் கால்நடைகளில் கொஞ்சத்தை விற்றுச் சிறிய படகு வாங்குவதற்காகச் செல்கிறான். இரண்டாவது பயணத்தில் 'NAJD'ல் இருந்து அல் தாணி குடும்ப முன்னோர்கள் கத்தார் நோக்கி வருகிறார்கள். மூன்றாவது பயணம் ஆசிரியர் ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள் என்ற சிறுகதையின் முடிவிலிருந்து ஆரம்பிக்கிறது. அறமும் அன்பும் நிறைந்த தந்தை அப்துல்லா ஸாகிப் தனது பதின் வயது செல்லக்குழந்தை ஹாசிமுக்கு, தண்டனை கொடுத்து அரபிக் கடலின் ஆழத்தில் விதைப்பதற்காக அனுப்புகிறார். அந்தச் செல்லக் குழந்தையோடு தண்டனை நிறைவேற்ற வரும் மூவரும் பயணிக்கும் பயணம். நான்காவது பயணம் 2007ம் ஆண்டு பணி செய்வதற்காக கத்தார் சென்று, தனது அதீத எதிர்பார்ப்பு நிறைவேறாமல் அங்கிருந்து திரும்பி வரும் ஜெபராஜ் என்ற இளைஞரின் பயணம். இந்த நான்கு பயணங்களும் வெவ்வேறு கால கட்டங்களில் வேறு வேறு இடங்களில் நடக்கின்றன என்றாலும், எங்கோ ஏதோ ஒரு தொடர்பை இந்தப் புனைவு தேடுகிறது