697 products
697 products
697 products
கடைசிப் பக்கங்கள் (Kadaisi Pakkangal) - Charu Nivedita
ZDP50
Regular price Rs. 140.00நற்றிணையில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தலைவன் தலைவியைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தில் புன்னை மரத்தின் அருகே அவளை அழைத்துச் செல்கிறான். அவளோ “இந்தப் புன்னை மரத்தை என் இளம் வயதிலிருந்து வளர்த்து வருகிறேன். இது என் தங்கை. இங்கே உம்மைச் சந்திப்பது வெட்கமாக இருக்கிறது” என்கிறாள். இப்படி ஒரு மரத்தைத் தன் சகோதரியாக நினைத்த சமூகம் இது. ஆனால் இன்று? மரங்களை இழந்தோம். மழையை இழந்தோம். நம் நேரத்தையெல்லாம் சினிமாவும், தொலைக்காட்சியும் இண்டர்நெட்டும் எடுத்துக் கொண்டது.
புத்தகத்திலிருந்து…
Author: Charu Nivedita
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 114
Language: Tamil
ரூஹ் (Rooh) - Lakshmi Saravanakumar
ZDP49
Regular price Rs. 250.00எளிய மனிதன் ஒருவனுக்கு வாழ்க்கை கொடுக்கின்ற தொடர் வலிகளும் அந்த அடர் இருட்டினூடாக அவன் காணுகின்ற மிகச்சிறிய மின்மினிப் புள்ளிகளைப் போன்ற ஆனந்தமும் ரூஹ் நெடுக சிதறியிருக்கிறது. வாழ்வின் புதிர் அவனை இழுத்துச் சென்ற சிராய்ப்புகளில் ஒரு பெண் தன் பரிசுத்தமான ஆன்மாவினால் ஞானத்தை பரிசளித்து விடுகிறாள். மரகதப் பச்சைக்கல் ரூஹில் ஒளிர்கின்றது. லஷ்மியின் மொழியில் ஆன்மீக விசாரத்திற்குரிய பூடகத்தன்மையின்றி உயிர்ப்பாய் வெளிப்படுகிறது.
-லஃபிஸ் ஷகித்
Author: Lakshmi Saravanakumar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 190
Language: Tamil
தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் (Tholaindhupona Siriya Alavilane Karuppu Nira Bible) - Sadhana
ZDP36
Regular price Rs. 120.00“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.
இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.”
-சாரு நிவேதிதா
Author: Sadhana
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 98
Language: Tamil
உறுதியோடு உயர்வோம் (Urudhiyodhu Uyarvom) - Paraman Pachaimuthu
ZDP34
Regular price Rs. 220.00சில மனிதர்களைப் பற்றிப் படிக்கும்போதும், கேள்விப்படும் போதும் வியப்பு மேலிடுகிறது, ‘என்ன மாதிரி வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள், எத்தகைய குணங்களைக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்!’ என்பதான வியப்பு.
அவர்கள் கொண்டிருந்த கொள்கைகள், சித்தாந்தங்கள், வழிகள், நெறிகள் என எல்லாமும் சரிவர இயங்க, அவர்கள் மற்றுமொரு தலையாய பண்பையும் கொண்டிருந்தார்கள் என்பது புரிகிறது. அதுவே அவர்களை தொடர்ந்து இயக்கியிருக்கிறது, அவர்களது பாதையில் வாழ வைக்கும்
சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு மேலேறி உயர்ந்து
செல்ல உதவிய பண்புகளில் அது முக்கியமானது என்பது புரிய வருகிறது. ‘உறுதி’ என்ற அந்த ஒரு பண்பு எந்த நிலையிலும் அவர்களை தொடர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது, உயர வைத்திருக்கிறது.
‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் மாதாமாதம் வெளிவந்து வாசகர்களின் வாழ்வில் புரிதல்களையும் வளர்ச்சியையும் தந்த சில தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இதோ உங்கள் கைகளில் – ‘உறுதியோடு உயர்வோம்!’
Author: Paraman Pachaimuthu
Genre: Religion/Spirituality/Self-Help
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 176
Language: Tamil
இந்து மதம் ஒரு அற்புதம் ( Hindu Madham Oru Arpudham) - Ramprakash
ZDP33
Regular price Rs. 400.00இந்து மதமானது பரந்த சமுந்திரம் போன்று, இமாலய பர்வதத்தைப் போன்று தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது. இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத்தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட, விரோதமான கொள்கைகளுக்குக் கூட இடமளிக்கிறது.
Author: Ramprakash
Genre: Religion/Spirituality/Self-Help
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 338
Language: Tamil
இதெப்படி இருக்கு ? (Itheppadi Iruku?) - Greenstone Lobo
ZDP32
Regular price Rs. 400.002019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா?
கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா?
கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா?
விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்
ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்
முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா? ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால்,
எதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள
முடியுமா?
அறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன
ஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று
உறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்
ஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்
கணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட
பலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.
ஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய
விளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,
உலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு
எரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.
இந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்
பற்றி சொல்ல லோபோ ரெடி! கேட்க நீங்கள் ரெடியா?
Author: Greenstone Lobo
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 292
Language: Tamil
நிலவு தேயாத தேசம் (Nilavu Theyadha Desam) - Charu Nivedita
ZDP37
Regular price Rs. 380.00“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”.
Author: Charu Nivedita
Genre: Travel and Holiday
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 282
Language: Tamil
உரையாடலில் பெரும் மழை (Uraydalil Perum Mazhai) - Iyyappa Madhavan
ZDP110
Regular price Rs. 100.00எல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே
இக்கவிதைகள்.
– கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
Author: Iyyappa Madhavan
Genre: Poetry
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 86
Language: Tamil
முள்ளம்பன்றிகளின் விடுதி (Mullampandrigalin Viduthi) - Ayyanar Viswanath
ZDP120
Regular price Rs. 170.00முள்ளம்பன்றிகளின் விடுதி-அய்யனார் விஸ்வநாத்/ ayyanar -short stories
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொடர்கள் அதற்கு உதாரணம். இந்த narrative புரட்சி தற்காலத்திய எழுத்தில் அவ்வளவாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது.
சாரு நிவேதிதா
Author: Ayyanar Viswanath
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 148
Language: Tamil
தனியறை மீன்கள் (Thaniyarai Meengal) - Ayyanar Viswanath
ZDP97
Regular price Rs. 150.00இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்.
Author: Ayyanar Viswanath
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 130
Language: Tamil
ஹிப்பி (Hippy) - Ayyanar Viswanath
ZDP92
Regular price Rs. 170.00இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது.
ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது.
ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும் இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும், கொண்டாட்டமும் வாசிப்போரைக் கனவுத் தன்மைக்குள் தள்ளுகிறது.
அய்யனார் விஸ்வநாத்தின் தனித்துவமான மொழியும் பின் நவீனத்துவக் கதை கூறலும் இந்நாவலின் அலாதியான வாசிப்பின்பத்திற்கு வலு சேர்க்கின்றன.
மாரியோ பர்கஸ் யோசாவைப் படிக்கும் போதெல்லாம் இந்த அளவு சுவாரசியமாகக் கதை சொல்ல தமிழில் யாருமே இல்லையே என்று வருத்தப்படுவேன். இங்கே இலக்கியம் என்றாலே ‘டல்’லாக இருக்க வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அய்யனார் விஸ்வநாத்தைப் படித்த போது அந்த என் எண்ணம் மாறி விட்டது. பிரமாதமான கதைசொல்லி. அதே சமயம் Content-உம் பல உள்ளடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. அய்யனார் வெறும் கதைசொல்லி மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் வாசிக்கக் கோருபவை அவர் நாவல்கள். அந்தத் தன்மைதான் பொழுதுபோக்குக் கதைகளுக்கும் இலக்கியத்துக்குமான வித்தியாசம். அய்யனார் விஸ்வநாத்தின் ஹிப்பி நாவலைப் படித்து விட்டேன். அற்புதம். எடுத்தால் கீழே வைக்க முடியாது. நல்லவேளை, அய்யனார் ஏற்கனவே வெளிநாட்டில் இருக்கிறார். இல்லாவிட்டால் கதையின் முடிவுக்காக அவரை நாடு கடத்தியிருப்பார்கள். மிரட்டும் நாவல். இதை உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
Author: Ayyanar Viswanath
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 122
Language: Tamil
இர்மா (Irma) - Aroor Bhaskar
ZDP104
Regular price Rs. 230.00உலக அரங்கில் அமெரிக்கா மிகப்பெரிய வலிமையானதொரு தேசம். பொருளாதார, ராணுவ ரீதியில் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு. இயற்கை வளங்களால் தன்னிறைவு பெற்ற ஒரு நாடு. தொழில்நுட்பத்தில் குளோபல் லீடர். உலகின் தவிர்க்கமுடியாததொரு சக்தி. என்றெல்லாம் பேசப்படுகிறது. அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை அமெரிக்கா இயற்கைப் பேரழிவுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தேசம் என்பதும் கூட. அந்த வகையில் பணி நிமித்தமாக சொந்தநாட்டைப் பிரிந்து அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு சாமானியன் தனது குடும்பத்தோடு இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட அனுபவம் ஒரு புதினமாகி (நாவல்) இருக்கிறது. “..அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி, அங்கே வாழும் மனிதர்களைப் பற்றி, அவர்களின் பாசங்குகளைப் பற்றி, அந்த நிலத்தின் அரசியல், கொள்கை மாற்றங்களைப் பற்றி, அங்கே இந்தியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பற்றி, மூலக் கதையிலிருந்து விலகாமல் கதையினூடே பதிவு செய்துபோகும் நாவலாக இர்மா- அந்த ஆறு நாட்கள் விரிகிறது. அதுவே இந்த நாவலின் சிறப்பம்சமாக கருதுகிறேன். ..” – அரவிந்த் சச்சிதானந்தம் (Aravid Sachithanandam), சென்னை
– எஸ். அர்ஷியா
Author: Aroor Bhaskar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 182
Language: Tamil
தீக்கொன்றை மலரும் பருவம் (Theekondrai Malarum Paruvam) - Abubakar Adam Ibrahim
ZDP91
Regular price Rs. 499.00பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி- கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது தவிர்க்க இயலாத தீய சம்பவம் ஒன்று நிகழப் போகிறதென்று உணர்ந்தாள். இருபத்தைந்து வயது ஹஸன் ’ரெஸா, ’ போதைப் பொருள் விற்பனை செய்பவன், உள்ளூர் ரவுடிகளின் தலைவன் , திருடும் பொருட்டு அவளது வீட்டின் வேலியைத் தாண்டிக் குதித்தபோது, அவள் இதயத்தில் தடம் பதிக்கப் போகிறான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அசாதாரண சூழலில் சந்தித்துக்கொண்ட இருவரும் ரகசிய உறவின் பயணத்தில் திளைத்திருக்கையில், பிந்த்தாவின் செல்வச்செழிப்புடைய மகன் அதை அறிய நேரும்போது, எதிர்பாராத வகையில் அவலமும் துயரமும் ஏற்படுகின்றன.
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை ஆட்கொள்ளும் மாறுபட்ட காதல் கதை.
Author: Abubakar Adam Ibrahim
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 404
Language: Tamil
சேராக் காதலில் சேர வந்தவன் (Sera Kathalil Sera Vandhavan) - Aathmaarthi
ZDP108
Regular price Rs. 120.00கதைகள் தத்துவங்களுக்கும் உண்மைகளுக்கும் எதிரானவை அல்ல. வினவுகளின்றிக் கதைகளைக் கைக்கொள்வோருக்கு ரகசிய உலகங்கள் திறக்கின்றன. காலத்தின் சாவிகளைத் தேடிப் பெறுவதற்கான சஞ்சாரம் புனைவின் வழி சாத்தியமாகலாம். கதைகளின் பேருலகில் உண்மை என்பது இரண்டாம் பட்சம்
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
பொய்யாய் பறத்தல் (Poyyai Parathal) - Aathmaarthi
ZDP106
Regular price Rs. 100.00வேட்டை மறந்தாலும் சூது மறக்காது
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 90
Language: Tamil
மனக்குகைச் சித்திரங்கள் (Manakkugai Chitirangal) - Aathmaarthi
ZDP105
Regular price Rs. 250.00பகிர்வதற்கு ஒரு துணையில்லாத ரசனை ஆளில்லாக் காட்டில் அலையும் பேய் போன்றது.
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 230
Language: Tamil
எழுதிச் செல்லும் கரங்கள் (Ezhudhi Sellum Karangal) - Aathmaarthi
ZDP52
Regular price Rs. 200.00எழுதுகிறவனை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள்..?முழு நேர எழுத்தாளன் என்று சொன்னால் கூட விடாமல் அதன் துணைக்கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டே இருப்பவர்களுக்கு எந்த பதிலைத் தந்து பரமபதம் அடைவது?இந்தப் பெயரற்றவர்கள் ஏற்படுத்துகிற அயர்ச்சி தான் மற்ற எல்லாவற்றையும் விடக் க்ரூரமானது.
Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 136
Language: Tamil
தீராக்கடல் (Theerakadal) - Aathmaarthi
ZDP47
Regular price Rs. 150.00கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்.மொழியின் உச்சபட்சக் கலை வடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை. அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது, தன்னையே மறுதலிக்கிறது
Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: Tamil
பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள் (Pattangal Vaytha Sattai Anindaval) - Aathmaarthi
ZDP46
Regular price Rs. 150.00புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெறிக்கும் பிறழ்மனம் கொண்டு காத்திருக்கிறார்கள்.
Author: Aathmarthi
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 132
Language: Tamil
டைமண்ட் ராணி (Diamond Rani) - Aathmaarthi
ZDP35
Regular price Rs. 150.00இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினு டனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள். கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல்.
Author: Aathmarthi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 104
Language: Tamil
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் (Surgical Strike) - Araathu
ZDP121
Regular price Rs. 200.00தமிழில் கட்டுரைகள் என்றாலே சிடுக்கு மொழியும், ஜாங்கிரி சுற்றுதலும் தானாகவே வந்து விடுகின்றன. அப்படி எழுதினால்தான் தீவிர கட்டுரை என்ற ஒரு அந்தஸ்தும் கிடைக்கும். நன்கு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் கட்டுரை என்று வந்தவுடன் பரணில் ஏறி அமர்ந்து கொண்டு இடது காலால் கூரையில் எழுத ஆரம்பித்து விடுகிறார். இந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் அராத்து சரளமான மொழியில் அவரின் பார்வையை எந்த பாசாங்கும் இன்றி சொல்லிச் செல்கிறார். அரசியல், சமூகம், உறவுகள், பயணம், பப் என அராத்தின் கட்டுரை உலகம் எங்கெங்கோ சஞ்சரிக்கின்றன. அனைத்து கட்டுரைகளிலும் இருக்கும் பொதுவான அம்சம், புதிய பார்வை, சுவாரசியம் மற்றும் சமரசமில்லா தனித்தன்மை. இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து இதைப் படித்துப் பார்க்கும் சமூகம், அப்போதே அராத்து இப்படி எழுதி இருக்கிறாரா என்று வியப்படையப் போவது உறுதி!
ஸ்ரீநிவாஸன் ராமானுஜம்.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 180
Language: Tamil
தற்கொலை குறுங்கதைகள் (Tharkkolai Kurungkathaigal) - Araathu
ZDP113
Regular price Rs. 325.00தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இதைச் செய்திருக்கிறார். தமிழ்ப் புனைக்கதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டி கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.
சாரு நிவேதிதா
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 252
Language: Tamil
பிரேக் அப் குறுங்கதைகள் (Break Up Kurungkathaigal) - Araathu
ZDP98
Regular price Rs. 180.00எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன.
பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 164
Language: Tamil
பொண்டாட்டி (Pondatti) - Araathu
ZDP72
Regular price Rs. 400.00தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.
அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 368
Language: Tamil
நள்ளிரவின் நடனங்கள் (Naliravin Nadanangal) - Araathu
ZDP38
Regular price Rs. 200.00இமயமலைப் பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்த போது மிரண்டு விட்டேன். Charles Bukowski-யின் கதைகளுக்கு நிகரான கதைகள் இவை. சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகரைத் துன்புறுத்தாமல் கதை சொல்லத் தெரியவில்லை. சமகாலத் தமிழ் இலக்கியம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறது. நான் வாசகர்களைச் சொல்லவில்லை.எழுத்தாளர்களைச் சொல்கிறேன். இந்த நிலையில் அராத்து எழுதிய இந்தச் சிறுகதைகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய இளைய சமுதாயத்தினர் இன்று அனுபவிக்கும் angst இந்தச் சிறுகதைகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அராத்துவுக்கு angst என்றால் என்ன என்று தெரியாது. தெரிய வேண்டியதில்லை.
Author: Araathu
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 186
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more