Saatcharadha/சாட்சரதா!-Ka.Su.Velayudhan/கா.சு.வேலாயுதன்

Saatcharadha/சாட்சரதா!-Ka.Su.Velayudhan/கா.சு.வேலாயுதன்

Regular price Rs. 310.00
/

Only 397 items in stock!
''எங்களின் உசிருக்கு உசிரான ஜனாதிபதி அங்கிளுக்கு.. இல்லையில்லை. ஜனாதிபதி தாத்தாவுக்கு.. அகழி பழங்குடி நல ஹாஸ்டலிருந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் கண்ணகி, மாதவி எழுதிக் கொண்டது..!' பேனாவை வைத்துக்கொண்டு யோசித்தாள். இவள் விடுபடும் இடத்திலிருந்து மாதவி டிக்டேட் செய்ய ஆரம்பித்தாள். ''எங்களில் ஒருத்திக்கு அம்மை அச்சன் ரெண்டு பேருமே இல்லை. ஒருத்திக்கு அம்மை மட்டும் உண்டு. அவளையும் ஜெயிலில் அடைப்பிச்சுருச்சு போலீஸூ. அதே கதிதான் மாதவியோட பெரியம்மா லட்சுமிக்கும், தாத்தா பாட்டி மாதி, ரங்கனுக்கும் நேர்ந்தது. இங்கே போலீஸ் ரொம்ப மோசம். நல்லவங்களையெல்லாம் அடிச்சுக்கொண்டு போய் ஜெயிலில் வைக்குது. எங்க அம்மா பாட்டி, தாத்தா பெரியம்மா போல நிறைய பேரோட அம்மை, அச்சன் எல்லாம் ஜெயிலில்தான் கிடக்கு. அச்சன்மாருக நிறைய சாராயம் குடிச்சே மரிச்சுப் போகுது. எங்களை மாதிரி குட்டிகள் வீட்டில் இருந்தா இதைப் பார்த்துக் கெட்டுப் போகும்ன்னு பள்ளிக்கூடம், ஹாஸ்டல்னு விடுது. ஆனா இங்கேயும் நாங்க நிம்மதியா இல்லை. ராத்திரியில ஹாஸ்டல்ல பேயோ, பிசாசோ நுழைஞ்சுடுது. பயமுறுத்தது. அதுல நிறைய பேரு கர்ப்பவதியாயிருதுன்னு ஊரே பேசுது. டீவி, பேப்பர்ல கூட செய்தியெல்லாம் வருது. வெளியே போனாலே எங்களை ஜனங்களெல்லாம் கேவலமா பார்க்கறாங்க. எந்தந்த குட்டிகளுக்கு பேரண்ட்ஸ் உண்டோ அவங்க எல்லாம் வந்து கூட்டீட்டுப் போயிடறாங்க. எங்களுக்கு அந்த நாதியும் இல்லை. தினம் தினம் ஹாஸ்டல்ல செத்துப் பிழைக்கறோம். எங்க டீச்சர்க ரொம்ப கஷ்டப்படறாங்க. நீங்க ஜனாதிபதி. மத்த ஜனங்க மாதிரி பேச மாட்டீங்க. நேரா வருவீங்க இல்ல? எங்க தாத்தா. எங்க சொந்தத் தாத்தாவா இருந்தா பார்க்க வருவீங்கள்ல? அதுபோல பாக்க வாங்க தாத்தா...!' -இப்படிக்கு கண்ணகி அம்மா பேரு பூச்செண்டு, வீட்டியூரு, அட்டப்பாடி எழுதியவள், ''இந்தாடி நீயும் உங்கையெழுத்துப் போடு!'' என்று மாதவியிடம் தந்தாள். அவளும் கையெழுத்திட்டாள்.