NINAIVUDHIR KAALAM/நினைவுதிர் காலம் - Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular priceRs. 330.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை 'நினைவுதிர் காலம்'. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி' நாவலின் தொடர்ச்சி இந் நாவல். இசைக்காகத் தன்னை அழித்துக்கொண்ட கலைஞனின் கதை ‘கானல் நதி' என்றால் இசையின் மூலம் தன்னை உயர்த்திக்கொண்ட கலைஞனின் கதை இது. முன்னது தோல்வி அடைந்தவனின் நற்செய்தி. இது வெற்றியாளனின் வரலாறு. கதைக்களத்திலும் சொல்முறையிலும் தொடர்ந்து சோதனைகள் செய்து பார்க்கும் யுவன் சந்திரசேகரின் புதிய முயற்சி; வெற்றிபெற்ற முயற்சி இந்நாவல்.
- சுகுமாரன்
- Literature and Fiction
- Ezutthu Prachuram
- Tamil