Meendum Taliban/மீண்டும் தாலிபன் -Pa.Raghavan/பா ராகவன்

Meendum Taliban/மீண்டும் தாலிபன் -Pa.Raghavan/பா ராகவன்

Regular price Rs. 680.00
/

Only 999 items in stock!
பா. ராகவனின் ‘மீண்டும் தாலிபன்' Bynge App-இல் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தாலிபன் நூலின் தொடர்ச்சியாகவும், தன்னளவில் ஒரு முழுமையான அரசியல் வரலாற்று ஆவணமாகவும்
திகழ்வதே இந்நூலின் சிறப்பம்சம்.

1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆப்கனிஸ்தானை ஆண்டார்கள். அல்லாவே அலறும்படியான முல்லாக்களின் ஆட்சியாக அது இருந்தது. ஆப்கனின் மிக நீண்ட ரத்த சரித்திரத்தில் அது ஒரு அழிக்க முடியாத கறை.
பிறகு 9/11 சம்பவம். அமெரிக்கப் படையெடுப்பு. மீண்டும் ஒரு ஆப்கன் யுத்தம். முல்லா முஹம்மது ஓமர் இறந்தார். ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டார். தாலிபன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். அனைத்தும் பொய். இன்றைக்கு மீண்டும் தாலிபன்கள் ஆப்கன் அதிகார பீடத்தைக் கைப்பற்றிவிட்டார்கள்.

ஆப்கனிஸ்தானில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களும் வேண்டாத ஆட்சி மாற்றமும் 1996ல் தாலிபன்களால் ஏற்பட்ட அபாயங்களைக் காட்டிலும் பல மடங்கு வீரியமுள்ளவை. மத அடிப்படைவாத சக்திகள் தீவிரவாதிகளாகவும் இருந்து, சூழ்ச்சி அரசியல் பயின்று, ஆட்சியைப் பிடித்தால் நாடு என்னாகும் என்று அலசி ஆராய்கிறது இந்நூல்.
Get Flat 15% off at checkout