En Peyar Escobar/என் பெயர் எஸ்கோபர்-Pa.Raghavan/பா ராகவன்

En Peyar Escobar/என் பெயர் எஸ்கோபர்-Pa.Raghavan/பா ராகவன்

Regular price Rs. 275.00
/

Only 998 items in stock!
எஸ்கோபரின் வாழ்வின் ஊடாக கொலம்பிய போதை மாஃபியா விஸ்வரூபமெடுத்த வரலாறு இது.

1989ம் ஆண்டின் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டிய பெயர் பாப்லோ எஸ்கோபர். போதைத் தொழிலை ஒரு கார்ப்பரேட் ஆக்கமுடியும் என்று செய்து காண்பித்துகொலம்பியா மட்டுமில்லாமல் உலகில் இயங்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கும் போதை மூலம் வருமானம் என்னும் ஆதிபாடத்தை போதித்தவன்.


எஸ்கோபர் கொள்கைப்பிடிப்புள்ளஏதேனுமொரு இயக்கம் சார்ந்த போராளியெல்லாம் இல்லை. வெறும் போதைக் கடத்தல். அதுதான் அவன் தொழில்வாழ்க்கை. ஆனால் பல போராளி இயக்கங்களுக்கு அவன் காட்ஃபாதராக இருந்திருக்கிறான். பணம் கொடுத்து வாழவைத்திருக்கிறான். நாய் விற்ற காசும் கொகெயின் விற்ற காசும் பொதுவாகக் குரைப்பதில்லை. புரட்சிகளுக்குக் காசுதான் முக்கியம். குரைக்காத காசு அல்ல. குறையாத காசு. அது போதையில் கிடைக்கும் என்று முதல் முதலில் சுட்டிக்காட்டியவன் எஸ்கோபர்.

கொலம்பிய சரித்திரத்தில்அதன் ஆட்சியாளர்களைக் காட்டிலும் அங்கு நடந்த மாபெரும் உள்நாட்டு யுத்தத்தைக் காட்டிலும் அதிக பக்கங்களை ஆக்கிரமிக்கக்கூடியவன் எஸ்கோபர். செய்த காரியம் மட்டுமல்ல காரணம். வாழ்ந்த வாழ்க்கையும் கூட.
Get Flat 15% off at checkout