
yahadha gagami/யஹதா காகமி -S.Senthil Kumar/எஸ். செந்தில் குமார்
Regular price Rs. 225.00
/
வாசலிலும் வராண்டாவிலும் நின்றிருந்த பிள்ளைகள் கல்லைப் பார்த்தார்கள். கல்லில் அவர்களது முகம் தெரிந்தது. அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சந்தோசத்தில் ஹோவென கத்தினார்கள். அவர்கள் கத்திய சத்தத்தில் பள்ளிக்கூடத்தின் கட்டடம் மேலெழுந்து பறப்பதுபோலிருந்தது. அந்தக் கல்லில் தன்னுடைய முகம் தெரிவதைப் பார்த்த ராஜேஷ்குமாருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அம்பிகாவும் பாண்டியம்மாவும் ஒன்றாக நின்று கல்லைப் பார்த்தார்கள். அம்பிகா பார்த்த போது அவளது முகம் தெரிந்தது. பாண்டியம்மாளின் முகம் தெரியவில்லை. பாண்டியம்மா கல்லைப் பார்த்த போது அவளது முகம் தெரிந்தது. அம்பிகாவின் முகம் தெரியவில்லை. இருவரும் மாறி மாறி எட்டிப்பார்த்தார்கள். ஒருவர் முகம் மட்டுந்தான் கல்லில் தெரிந்தது.
Get Flat 15% off at checkout