Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் - Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா

Semmanjal Nira Mayanam/செம்மஞ்சள் நிற மயானம் - Yathiraja Jeeva/யதிராஜ ஜீவா

Regular priceRs. 150.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே...

அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து
எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா....
சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி
நடையை இந்தப் பூக்கள் பின்தொடர்கின்றன. மலர்ச்சியின் உன்னதத்தைக் கதிராக
வீசியபடி நம்மைப் பரவசப்படுத்துகின்றன. உள்ளார்ந்த ஒரு வசீகரத்தை ஏந்திக்கொண்டு
என்னமாய் அவை பூத்திருக்கின்றன.
அஸ்தமனத்திற்குப் பிறகான சூர்யகாந்தியின் சோகம் பரிதாபத்திற்குரியதா? இல்லை.
ஒருபோதும் இல்லை. அது ரசிப்பிற்கும் கொண்டாட்டத்திற்குமே உரியது. உதயம் நோக்கிய
நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தேடி வந்து சூழ்ந்த இருளுக்கு இரவெல்லாம் அவை
சொல்லிக்கொண்டிருக்கின்றன. தேக்கிய உன்மத்தத்தை ஒவ்வொரு நரம்பிலும் பரவச்
செய்யும் ஆனந்த யாத்திரையின் சலனங்களை அதில் தரிசிக்க முடியும்.


Recently viewed