
Ottraridhal/ஒற்றறிதல் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம்.
கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்