Idaiththerthal/இடைத்தேர்தல் - Nagarathinam Krishna/நாகரத்தினம் கிருஷ்ணா

Idaiththerthal/இடைத்தேர்தல் - Nagarathinam Krishna/நாகரத்தினம் கிருஷ்ணா

Regular priceRs. 145.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
- இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பி கொடுத்துட்டுப் போச்சே! இரண்டும் ஒண்ணுதானே?
- இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்குத்தான் ஓட்டுப்போடணும்னு சொல்லி பெரிய பாளையத்தம்மன் படத்துமேல சத்தியம் வாங்கினாங்களே!
- என்னமோ போ நீ சுலபமாச் சொல்லிட்ட எனக்குப் பயமா கீது.
- தோடா! இன்னாத்துக்குப் பயம், எல்லாத்துக்கும் நான் கீறேன்னு சொல்லிட்டனில்ல.
- பணத்தைக் கொடுத்திட்டு சாமி படத்துமேல சத்தியம் பண்ண சொல்றாங்க, நமக்கு ஒரு சாமியா ரெண்டு சாமியா எத்தனை சாமிமேலத்தான் சத்தியம் வக்கிறது. ஏற்கனவே செஞ்ச பாவத்துக்குத்தான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு அம்போன்னு நிக்கிறன்.
- அடப்போக்கா! நீ வேற. பாவம் புண்ணியம் இன்னிக்கிட்டு. கொன்னாப்பாவம் தின்னாப் போச்சுன்னு போவியா. அவங்க ஒரு ஓட்டுக்கு எவ்ளொ கொடுத்தாங்கோ, இவங்க அதைப்போல ரெண்டு மடங்கு கொடுப்பாங்கோ. உங்க ஊட்டுல மட்டும் ஆறு ஓட்டு. அவ்ளோ துட்டை நீ பார்த்திருக்கமாட்ட, கறிய மீன வாங்கித் துன்னுட்டு, கொஞ்சநாளைக்கு வீட்டுல கிட. இன்னா நான் சொல்றது புரியுதா. இந்த முறை வாசலில் இருக்கிற அத்தனை பேரு ஓட்டும் குண்டானுக்குத்தான். பெரிய பாளயத்தம்மன் மேல சத்தியம் பண்ணிக்கிறோம் மறந்திடாத. இதுக்குப் பவரு ஜாஸ்த்தி.
இடைத்தேர்தல் சிறுகதையிலிருந்து...
  • Literature and Fiction
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed