Miga Neenda Udalin Thuyaram/மிக நீண்ட உலகின் துயரம் -Pavithra/பவித்ரா

Miga Neenda Udalin Thuyaram/மிக நீண்ட உலகின் துயரம் -Pavithra/பவித்ரா

Regular price Rs. 120.00
/

Only 386 items in stock!
சிலாகிக்க முடியாத
கண்டு கேட்டு அனுபவித்த
அனுபவமற்ற அனுமானமாய்
சிற்சில உணர்க்குவியல்களை
எழுத்துக்களில் தோரணமாய் கட்டி
தொங்கவிட்டிருக்கிறேன். நீங்கள்
ச்சீ என முகஞ்சுழியலாம்
நன்றென திரும்பலாம்.
வெறும் பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னுடைய கவிதைகள் இவை. இது நிச்சயம் எனக்கு வியப்பை அளிக்கிறது. இதற்கான உழைப்பை நான் இன்னும்  வழங்கவில்லை. தடைகள் மலைகள் போல் முன் நிற்கிறது. இலக்கியம் கவிதை எல்லாம் வேண்டாமோ நாம் அதற்கெல்லாம் சரிபட்டு வர மாட்டோமோ என்று நினைக்கும்போதெல்லாம் இப்படியானதொரு அற்புதங்கள் நிகழ்ந்துவிடுகிறது. சுயபச்சாதாபமும் சுயவெறுப்பும் கொண்ட ஒரு பிசாசிற்கு இதைவிட வேறு என்ன உந்துசக்தி இருந்துவிட முடியும். ஆளுமைகள் நிறைந்த இந்த இலக்கிய உலகில் வெறும் தூசு நான், என்பது மட்டும் அறிந்ததே. இப்போது சுயத்திற்காக மட்டுமே பைத்தியம் பிடிக்காமலிருக்க எழுதிக்கொண்டு இருக்கிறேன். சிறிது காலம் தொடரும் என்பது மட்டும் நிச்சயம்.