Yathi/யதி-Pa.Raghavan/பா .ராகவன் -முன்பதிவு

Yathi/யதி-Pa.Raghavan/பா .ராகவன்

198

Regular price Rs. 1,000.00 Sale price Rs. 700.00 Save 30%
/

Only 313 items in stock!

யதி அளவுக்கு ஒரு நாவல் சமீப காலத்தில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டதோ, கொண்டாடப்பட்டதோ, இல்லை. இதன் பிரம்மாண்டம், இது காட்டும் நாமறியாத பேருலகம், மெய்க்கூச்செரிய வைக்கும் சம்பவங்கள், அசலான மனிதர்கள், அசாதாரணமான தருணங்கள். எல்லாமே காரணம்தான். அனைத்தையும் விஞ்சியது இது தரும் தரிசனம்.

உலகில் ஒரு பாதமும் உணர்வின் உச்சத்தில் ஒரு பாதமும் பதித்து, உலகையும் உணர்வையும் கடந்து பிரபஞ்ச வெளியை நிறைக்கும் யோகிகளும் சித்தர்களும் நிறைந்த மாயப் பெருங்குகையின் கதவுகளை இந்நாவல் திறந்துவிடுகிறது.

இது நாம் அறியாததொரு உலகம். காலமற்றது. ஆனால் காலத்தை நிகர்த்த பிரம்மாண்டமானது. தகிப்பும் உக்கிரமும் நிறைந்தது.

யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டதொரு அசுர சாதனை.