Nallavanukku Edharku Incognito/நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?-கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy

Nallavanukku Edharku Incognito/நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?-கே. எஸ். குப்புசாமி/K.S. Kuppusamy

Regular price Rs. 210.00
/

Only -20 items in stock!
இது டிஜிட்டல் உலகம். முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தொழில்நுட்பம் நமது வாழ்வை எளிதாக்கியிருக்கிறது.  இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிக்கலாக்கிக்கொள்வோரும் உண்டு.
இந்த டிஜிட்டல் வலைக்குள் நாம் சிலந்தியா இல்லை மாட்டிக் கொண்ட பூச்சியா என்பதைப் பொறுத்தே நன்மையும் தீமையும்.
சராசரி மனிதருக்குத் தொழில்நுட்பம் கூடுதல் வசதி. மாற்றுத் திறனாளிகளுக்குத் தொழில்நுட்பம் மறுவாழ்வு. தகவல் தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்வில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் மகத்தானவை.
டிஜிட்டல் உலகில் என்னென்ன வசதிகள் உள்ளன, எவற்றையெல்லாம் நம் வாழ்வைச் செம்மைப்படுத்தப் பயன்படுத்தலாம், எவை ஆபத்து, என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பவை குறித்தெல்லாம் எளிய முறையில் இந்நூல் விளக்குகிறது.