Engal Vizhithirukkum pyramid-எண்கள் விழித்திருக்கும் பிரமிடு -/Nesamithranநேசமித்ரன்

Engal Vizhithirukkum pyramid-எண்கள் விழித்திருக்கும் பிரமிடு -/Nesamithran/நேசமித்ரன்

Regular price Rs. 200.00
/

Only 997 items in stock!
நம் காலத்தில் பாரதியும் பாரதிதாசனும் இன்குலாபும் பெரும் முன்னோடிகள். இந்த வேர்களின் நீட்சிதான் நேசமித்ரன் அரசியல் கவிதைகளைப் படைப்பது. மொழியின் போதாமை என்ற சொல்லுக்கெதிரான போராட்டத்தை நேசமித்ரன் தொடர்கிறார் என்பது தெரிகிறது. முக்கியமாக வறட்சியான தேய்ந்த சொற்பதங்களில்லை. ஒருவித சுவையின்பம் கவிதைகளில் தொற்றிக்கொண்டே வருகிறது. மறைந்த கவிஞர் பிரமிளுக்குப் பிறகு ஒரு சிலரால் மட்டுமே அதனை செய்ய முடிந்தது. பின்னல் அலைகளைப் போல ஒரே கவிதையில் குவித்திருக்கும் அர்த்தப் பொருண்மைகள் தங்குதடையில்லாத ஓட்டம் என இவற்றின் ஊடே காணும்போது நேசன் ஏதோ திட்டம் போட்டு எழுதுவதுபோல் தோன்றவில்லை. கவிதையின் கருவே தொடக்கத்தையும் முடிவையும் தேர்ந்து கொள்கிறது. அது ஓர் அமைவு. நேசமித்ரன் இக்கவிதைகளில் இணைத்துக்கட்டுகிற விஷயங்கள் மானுட அக்கறை, மதிப்புமிக்க பூமியின் மீதான காதல், ஓர் எதிர்ப்புக்குரல், மூன்று கண்ணிகளில் இவற்றை இணைத்து விடும் லாவகம், இவ்வாறாகத்தான் இவருடைய கவித்துவத்தின் செயலாக்கம் நிகழ்கிறது.

- ப்ரியம்