Vaadhavooran Parigal/வாதவூரான் பரிகள்-Era.Murugan/இரா. முருகன்

Vaadhavooran Parigal/வாதவூரான் பரிகள்-Era.Murugan/இரா. முருகன்

Regular price Rs. 100.00
/

Only -3 items in stock!

ஓரான் பாமுக்கின் ‘இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் படிக்கக் கிடைத்தது.  இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார்.
எனக்கு அங்கே கொறிக்க காகித அல்வா கிடைத்தது. காகிதத்தைப் போட்டு அல்வா கிண்டித்  தின்ன முடியுமா? அல்லது, நம்ம கோழிக்கோடு மிட்டாய்த்தெரு இனிப்புப் பலகாரக் கடைகளில் கோழிக்குஞ்சு எசென்ஸ் ஊற்றிக் கலந்து கோழி அல்வா செய்து பரபரப்பான விற்பனையில் இருப்பது மாதிரியா இந்த அரேபிய இனிப்பு?
பேப்பர் அல்வா என்பது மெல்லிய தகடுகளாக அல்வாத்துண்டைச் சீவி இரண்டு தகடுகளுக்கு நடுவே இனிப்பு மாவாவோ உலர்திராட்சை, பாதாம்பருப்போ இட்டுத் தருவது என்று ஒரு சாரார் சொல்ல, அது வேபர் அல்வா, எனில், பொறுபொறுவென்று வறுவல் மாதிரியான பிஸ்கட்டுக்கு நடுவே அல்வா வைத்துத் தின்னத் தருவது என்று இன்னொரு குழுவினர் அபிப்பிராயப்படுகிறார்கள்.