Ubugu/உபுகு-Babaga/பாபாகா

Ubugu/உபுகு-Babaga/பாபாகா

Regular price Rs. 350.00 Sale price Rs. 300.00 Save 14%
/

Only 369 items in stock!
உபுகு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலே இந்த நாவல். அந்தப் பதிலைத் தெரிந்துகொள்ள இந்த நாவலில் பிரயாணித்தே ஆகவேண்டும். இது ஒரு பின்நவீனத்துவ நாவல். பின்நவீனத்துவ நாவல்கள் கதை சொல்வதில் ஆர்வம் காட்டாதது போல் பொதுவாகத் தோற்றம் கொள்கின்றன. கதை ஒரு அமைப்புதான் என்றால், எப்படிப்பட்ட புனைவமைப்பும் கதைதான். இப்படிப்பட்டதுதான் ஒரு நாவல் என்ற அமைப்பின் அதிகாரத்திலிருந்து விலகிச் செயல்படுவதன் மூலம், இப்படிப்பட்டதுதான் வாசிப்பு என்ற அதிகாரமும் இயல்பாக விலகி, வாசகர் தன் சுதந்திரத்தால் மனதில் உண்டாக்கிக்கொள்ளும் ஒரு பிம்பமே பின்நவீனத்துவ இலக்கியம் என்பதே அதன் கோட்பாடு. உபுகு இந்தக் கோட்பாட்டிலிருந்து மாறுபடுவது போல் மிரட்டுகிறது. அது நரகத்தில் நடக்கும் ஒரு சாகசக் கதையின் தோற்றத்தில் களம் காணும் ஒரு சமுதாயப் பகடியாகத் தன்னை அமைத்துக்கொண்டு மாயை என்றால் என்ன? என்று விவாதிக்கிறது. கண் முன் இருக்கும் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டதுதான் என்றால், அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற காரண அறிவு ஒன்று அதை உருவாக்குகிறதா? அல்லது உருவாக்கும் சக்தியின் தீர்மானமின்மை காலத்தில் செய்யும் முடிவுக் குவியலை நாம் தரிசிக்கிறோமா? ஒரு பாறாங்கல்லைத் தூக்கி எறிந்து அது பெரும் உயரத்திலிருந்து கீழே விழுந்து பற்பல சிறுபகுதிகளாக உடைந்தாலும், அந்த அத்தனை கற்களும் ஒரு சிற்பக் கொலுவாகத் தரையில் கிடந்தால் அது எத்தகைய ஆச்சரியமாக இருக்கும்? அத்தகு ஆச்சரியத்தை நடத்திக்காட்டுவதுதான் இந்த நாவலின் முயற்சி. இதையே அது படைப்பின் கருவாகவும் முன்வைக்கிறது. உபுகு நிச்சயமாகக் கதை சொல்கிறது. கதைக்குண்டான அத்தனை முடிச்சுகளினாலும் முடிசூடிக் கொள்கிறது. ஆனாலும், அது ஒரே ஒரு சொல்லின் பொருள் மட்டுமே. அந்த சொல்லை விளக்க ஒரு அகராதியே தேவை. உபுகு.