Komora/கொமோரா -Lakshmi Saravanakumar/லக்ஷ்மி சரவணகுமார்
Regular price Rs. 500.00
/
1. கதிர் வீட்டிலிருந்து விடுதிக்கு அனுப்பப்பட்ட நாளில் கனவுகளில் சந்தோசப்பட பழகினான். எல்லா சந்தோசங் களும் தற்காலிகமானவை என்பதை பால்யம் உணர்த்திய நாளில் அவனுக்குக் கனவுகளின் மீது வெறுப்புண்டானது. எதையெல்லாம் விரும்புகிறோமோ அதையெல்லாம் வெறுக்க நேரும் சூழல் வருந்தத்தக்கது.
2. பசியால் நிரம்பிய பகலும், பயத்தால் நிரம்பின இரவுகளும் வாய்க்கப்பெற்ற விடுதிக் காலத்தில் வெளிச்சம் கூடப் பாதுகாப்பாய் இருந்ததில்லையென கர்த்தரிடத்தில் அவன் மன்றாடாத நாளில்லை.
3. கர்த்தர் அவனிடம் பேசுவதுண்டு. அவன் பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பதுண்டு. 'எல்லா வருத்தங்களையும் நான் நீக்கப் பண்ணுவேன். உன்னை வருந்தச் செய்கிறவர்களுக்கும் சேர்த்துப் பிரார்த்தி. ஸ்தோத்திரம்' என்பார்.
- சாத்தானின் மனவெளிக் குறிப்புகள்

Get Flat 15% off at checkout