Saanizhal/சாநிழல்-K. Daniel/கே. டானியல்

Saanizhal/சாநிழல்-K. Daniel/கே. டானியல்

Regular priceRs. 120.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
பஞ்சமர் வரிசையில் முன்றாவதான ‘அடிமை'களை நான் எழுதி முடிக்கும் தறுவாயில் இருந்தபோது மிகவும் சிரமத்தில் சேகரிக்கப்பட்ட அந்த நாவலுக்குரிய விவகாரங்கள் பயனற்றுப்போகக்கூடாது என்பதனால் அந்தவேளை எனக்கு ஏற்பட்ட சுகயீனத்தின் காரணமாக எழுந்த நிலையினால் அந்த ‘அடிமை'களை முடித்துவைக்க, அந்த வழியில் வரக்கூடிய இரு எழுத்தாளர்களை இனம்காட்டி, இடையிலே அதன் முன்னுரையையும் எழுத நேர்ந்தது. அதன்பின்பு என்னை. நோக்கி வந்த மரணம் பின்நோக்கிப் போய்விட்டதால் அதை அடுத்து மேலதிக அறுவடையாக ‘கானல்' என்ற நாவலையும் எழுதி முடித்துவிட்டு, மேலதிகத்திற்கு மேலதிக அறுவடையாக இந்தப் ‘பஞ்சகோணங்களை' எழுதியிருக்கிறேன்.
இந்த பஞ்சமர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை - ஒரு வர்க்கப் போருக்கு அவர்களைத் தயாராக்கி, அவர்களையும், அவர்களோடொத்த வாழ்வு வாழும் மக்களையும் அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வரும்வரை எழுதுவதற்குப் பலர் தோன்றிவிட்டனர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
- கே.டானியல் 15.11.1984
வாசகர்களுக்கு,
மேற்கூறப்பட்ட நாவல்களுக்கு மேலாக கே.டானியலினால் தான் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன் அதாவது 1986 மார்ச் 23 இற்கு முன் எழுதப்பட்ட ‘சாநிழல்' என்ற குறுநாவலே இதுவாகும். நீண்டகாலமாக அச்சேற்றப்படாதிருந்த இந்த ‘சாநிழலை' அச்சேற்றியதில் மனநிறைவடைகிறேன்.
- டா. வசந்தன், 23.03.2023
  • Literature and Fiction
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed