
Paithiya Rusi/பைத்திய ருசி -Ganesakumaran/கணேசகுமாரன்
Regular price Rs. 130.00
/
சுயகொலைகள் நாம் நிகழ்த்துவதன்று. நம் சுயத்தினைக் கொலை செய்யும் இச்சமூகம். தற்கொலை முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். முயற்சி என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். தோல்வியில் முடியும் பெரும்பாலான தற்கொலைகள் உன்மத்த உலகில் சஞ்சரிக்க வைக்கும். எண்ணிப்போட்டால் சாகமுடியாது. அள்ளிப்போட வேண்டும். உள்ளங்கைக்குள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகள் பார்க்கையிலே இதயத்தின் ஒரு ஓரம் மளுக்கென்று உடைய வேண்டும். கண்ணீர் பெருகும். வாயில் நீர் நிரப்பி சட்டென்று மாத்திரைகள் கொட்டி விழுங்கும் கணமே நீங்கள் வெற்றியைத் தொடுகிறீர்கள் என்று அர்த்தம். உடம்பு முழுவதும் இருதயம் வளரும். இந்த உலகின் கடைசிவரை ஓடிவிட்டவனின் மூச்சு உங்களைச் சுற்றிப்பரவும். நீங்கள் இரைக்கத் தொடங்குவீர்கள். ஐந்து நிமிடத்துக்குள் முகுளம் மரத்துப்போகும். இமை மூடிவிட்டால் தொலைந்தீர்கள். நீங்கள் இறந்துவிடுவீர்கள். மெல்ல வீதியில் இறங்குங்கள். நிமிர்ந்து வெயில் நோக்க ஒத்துழைக்காத கண்கள் நிலம் தாழ்த்துங்கள். பார்வையில் பகல் போய் இரவு வரும். இரவு மறைந்து கண் கூசும். செவிக்குள் யாரோ சிரிப்பார்கள். பின் நிசப்தம்.