Megangalin Pethi/மேகங்களின் பேத்தி - Seenu Ramasamy/சீனு ராமசாமி

Megangalin Pethi/மேகங்களின் பேத்தி - Seenu Ramasamy/சீனு ராமசாமி

Regular price Rs. 210.00
/

Only -50 items in stock!

மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை இவரது கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை. ஒரு நல்ல கவிதை, தன்னை வாசிப்பவர்களை, அவர்களது வழக்கமான இடத்திலிருந்து நகர்த்திச் செல்கிறது. அவர்கள் இருளில் இருந்தால், ஒளியை நோக்கியும், அவர்கள் சந்தடியிலிருந்தால் விசாலமான - காற்றோட்டமான இடம் நோக்கியும் நகர்த்துபவை. சீனு ராமாசாமியின் கவிதையோடு நகர்பவர்கள் ஒரு நாகரிக சமூகத்துக்கு இடம் பெயர்கிறார்கள். முந்தைய அவரது தொகுப்புகள்போலவே, ‘மேகங்களின் பேத்தி' தொகுப்பின் கவிதைகளும் செயல்படுகின்றன.
- கவிஞர் கரிகாலன்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை நிலைப்படுத்திக்கொண்டவர் சீனு ராமசாமி. ‘ஆக் ஷன்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதிப்படி செயல், நடவடிக்கை, நடிப்பு என்ற பொருள்கள்தான் உண்டு. ஆனால், திரையகராதியில் அடிதடி, அதிரடி என்ற அர்த்தங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த இலக்கணத்துக்கு அடங்க மறுத்து, அமைதியான நீரோட்டத்தின் பேரலைகளை உணரச் செய்யும் படங்கள் சந்தையிலும் வெற்றி காண முடியுமெனச் செய்துகாட்டிய முதன்மை இயக்குநர்களில் ஒருவர் இவர். அந்த நீரோட்டத்துக்கே உரிய சில்லென்ற புத்துணர்ச்சியை, புதிரான ஆழத்தைத் துய்ப்பதற்கு இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் பாதையமைக்கிறது.
- அ. குமரேசன்,
மேனாள் பொறுப்பாசிரியர், தீக்கதிர் நாளிதழ்