
Mayil Mark Kudaigal/மயில் மார்க் குடைகள்-Era Murugan/இரா.முருகன்
Regular priceRs. 270.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
‘மயில் மார்க் குடைகள்’ கிட்டத்தட்ட 1980-களில் நிகழ்வது. இடம் குறிப்பிடப்படாமல் நிகழும் இக்கதையை இன்றைக்கும் பொருத்திப் பார்க்கலாம். தொகுப்பின் தலைப்பை இந்தக் கதையே தருகிறது. அந்த முதிய தம்பதிகளில் வரும் முதுபெண்ணை வீட்டுக்கு வந்து மரபிசை பாடச் சொல்லித்தரும் இருமலோடு கூடிய மூதாட்டியாக நான் அறிவேன். ஒரு சரஸ்வதி பூஜைக்குப் பாடச் சொல்லி, இருமலோடு பாதிப் பாட்டில் குரல் உடைந்து நின்ற அவருக்கு இருநூறு ரூபாய் சம்மானம் தந்து அனுப்பியது தவிர நான் வேறெதுவும் செய்யவில்லை. ராகி தந்தீரா தான் பாடினார் அவர். ‘தீவு’, ‘புத்தகன்’ ஆகியவை முழுக்க மாந்திரீக யதார்த்தவாதக் கதையாடலைக் கொண்டவை. நாவலிலும் சிறுகதையிலும் நான் மேஜிக்கல் ரியலிசத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வருகிறேன் என்பதைச் சொல்லியாக வேண்டும். இவையும் விட்ட குறை தொட்ட குறையாக எழுதிப் பார்த்தவை.
- இரா.முருகன்
- Literature and Fiction
- Ezutthu Prachuram
- Tamil