KIDATHI/கிடாத்தி - Balajothi Ramachandran/பாலஜோதி ராமச்சந்திரன்
Regular priceRs. 270.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
வாழ்க்கையில் முதன்முறையாக, எனது குளத்தில் அப்பா முதல் கல்லை எறிந்திருக்கிறார். அதுவும் எரிகல். சொல்லெரிகல். அவியாத அக்னியைத் தரித்துக் கொண்டிருக்கும் கல். அது, என்னைப் பொசுக்கியபடியே ஆழத்தில் அமிழ்ந்து எரிந்துக் கொண்டிருந்தது. அப்பாவின் மீது கொண்டிருந்த அத்துணை மதிப்பீடுகளையும் அந்தச் சொல்லெரிகல் சடசடவென சரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது. அந்தச் சாம்பலில் அப்பாவின் முகம் என்னைப் பார்த்துச் சிரித்தது. என் முகம் சுருங்கியது. அய்யனார் சிலையாக அமைதியில் உறைந்தேன்.
இதுவரை உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த அப்பா இல்லை. இவர் வேறு. அப்பாவுக்கு வேறு முகம் இருக்கிறது. வேறு குரல் இருக்கிறது. வேறு சொல் இருக்கிறது. என் அப்பா மாத்திரம்தான் இப்படியா? இல்லை, உலகத்தில் உள்ள எல்லா அப்பாக்களும் அப்படித்தானா?
- Literature and Fiction
- Ezutthu Prachuram
- Tamil