
Kalittradi/களிற்றடி-Sowmya/சௌம்யா
Regular price Rs. 250.00
/
கலைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகள் கலைடாஸ்கோப்பில் கலையாவதுபோல் வெவ்வேறு உணர்வுகளும் விசித்திர நிகழ்வுகளும் புனைவு வேடந்தரித்து வருகின்றன. சிறுமியின் வியப்பும், குமரியின் பதற்றமும் ஒருசேரக் குவிந்த புனைவுத் தருணங்கள் இவற்றின் கல்யாண குணம் என்றாலும் அவற்றை மீறிக் கொண்டு வெள்ளி முளைத்தது மாதிரி சட்டென மானுடத்தின் இருண்மை எங்கேனும் வெளிப்பட்டு அதிர்ச்சி தருகிறது. மத்யமர் சங்கடங்கள் இவற்றின் சாரமெனக் கூறலாம். பெண்களின் சிக்கல்களைப் பெண்கள் எழுதுவது என்ற வழமையான வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் பொது விஷயங்களைப் பெண் பார்வையில் சொல்ல முனைந்திருப்பது தொகுப்பின் நிமிர்வு. ஒரு புதிய எழுத்தாளினியின் வருகையை அழுத்தமாக அறிவிக்கும் கதைகள் இவை.
Get Flat 15% off at checkout