KADARKAZHIYODI/கடற்கழியோடி-Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்

KADARKAZHIYODI/கடற்கழியோடி-Abul Kalam Azad/அபுல் கலாம் ஆசாத்

Regular priceRs. 260.00
/

  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

வலசை போகும் பறவைகளைப்போல அவன் வளைகுடாவுக்குச் செல்கிறான். உலகப் பணக்காரர்கள் விரும்பிக் குடியேறும் நகரமாக துபாய் உயர்வதற்கு முன்னரே பிழைப்புத் தேடி அதன் கரைகளில் குடியேறுகிறான். அதன் பிரம்மாண்ட வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்துத் தானும் வளர முயற்சி செய்கிறான்.
அவன் புதிதாக எதையாவது முயற்சி செய்யும்போது, துபாய் அவனைத் தன்னிடமிருந்து விலக்கிவைத்து விளையாட்டுக் காட்டுகிறது. அவனும் சோர்வடையாமல் மீண்டும் மீண்டும் திரும்பிவந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறான். ஒவ்வொரு பிரிவிலும் தன்னை இன்னொருவனாக மாற்றிக்கொள்கிறான்.
நாட்டைவிட்டு அவனை வெளியேற்றி அழகுபார்ப்பதில் அந்த நகரம் வென்றதா? மீண்டும் மீண்டும் திரும்பி வந்ததால் அவன் வென்றானா?
இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் தொடங்கி இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இன்றுவரையில் அசுரப் பாய்ச்சலில் உயர்ந்து விண்ணைத்தொட முயற்சி செய்யும் துபாயுடன் சேர்ந்து வளர்ந்தவனின் கதை இது. 

  • Literature and Fiction
  • Ezutthu Prachuram
  • Tamil

Recently viewed