396 products
396 products
396 products
Alagila Vilayattu-அலகிலா விளையாட்டு-Pa.Raghavan/பா. ராகவன்
196
Regular price Rs. 200.00பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன?
2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, 2004ம் ஆண்டு பாரா, பாரதிய பாஷா பரிஷத் விருது பெறவும் வழி வகுத்தது.
Idakaradakkal/இடக்கரடக்கல்-Vasumithra/ வசுமித்ர
195
Regular price Rs. 380.00Yuga Dharmam/யுக தர்மம் -Selvaraj Jegadeesan/செல்வராஜ் ஜெகதீசன்
193
Regular price Rs. 200.00Vaadatha Neelathamarigal/வாடாத நீலத் தாமரைகள் -Sathyanandan/சத்யானந்தன்
192
Regular price Rs. 230.00சிலிங்/Siling -கணேசகுமாரன்/Ganesakumaran
191
Regular price Rs. 110.00அல்லிக்கேணி/Allikeni-ராம்ஜீ நரசிம்மன்/Ramjee Narasiman
190
Regular price Rs. 270.00KADALIL ERINDHAVAI/கடலில் எறிந்தவை -யுவன் சந்திரசேகர்
189
Regular price Rs. 260.00…அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்:
இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே.
இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன?
மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க் கப்போனால், இந்தமாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலி ஆவார்...
அதிகாரி சிரித்தாராம்….
-’அடையாளம்’ கதையிலிருந்து.
VALAR KAATHAL INBAM/வளர் காதல் இன்பம்-கே .எஸ்.சுதாகர்
188
Regular price Rs. 130.00saabakumizh/சாபக்குமிழ் -ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
187
Regular price Rs. 120.00DAD'S FAVOURITE NEWSPAPER- AZHAGIYASINGAR
185
Regular price Rs. 120.00Azhagiyasingar's tales consist of both mental trauma and stunning twists. And all of them speak of the writer's own individual creativity. It is indeed remarkable that the author's creativity comprises so many dimensions. Some of the stories are very short.
It is clear that Azhagiyasingar is very much bothered about both the present and the future. A streak of pain seems to run through his gentle teasing humour.
-Ashokamitran
போர்க்குதிரை /PORKUTHIRAI-லக்ஷ்மி சரவணகுமார்
184
Regular price Rs. 260.00கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும் சமூகத்திற்கென கலைஞன் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். இலக்குகளை நோக்கி ஓடுகிறவர்களுக்கு லட்சியம் என்பது தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமில்லை என்பதைத் திரும்ப திரும்ப உணர்த்த வேண்டியுள்ளது. இலக்கிய வாசிப்புதான் இலக்குகளைத் துரத்தும் மனிதர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ’மனித செயல்பாடுகள் அனைத்தின் அர்த்தமும் கலைரீதீலான பிரக்ஞையில்தான் இருக்கிறது.’ என்னும் தார்க்கோவ்ஸ்கியின் கூற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஹாம்லெட்/Hamlet-William Shakespeare/வில்லியம் ஷேக்ஸ்பியர் -தமிழில் -Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன்
ZDP 181
Regular price Rs. 450.00பின்னணிப் பாடகர்/Pinnani padagar - Sureshkumara Indrajith/சுரேஷ்குமார இந்திரஜித்
ZDP 180
Regular price Rs. 140.00இயக்கம்/Iyakkam- Kutti Revathi/குட்டி ரேவதி
ZDP 178
Regular price Rs. 140.00இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் பெண்ணிய கற்பனையின் உச்சம். பெண்ணின் இயக்கத்தை முதன்மையாக வைத்து வாழ்க்கையையும் உலகத்தையும்காலத்தையும் பரிமாணம் உணரமுடியுமானால், எல்லாமே வேறு வகையானவாழ்க்கையாகவும் பேரண்டம் கையளிக்கும் அற்புதங்கள் இன்னும் திடமானவையாகவும் காலத்தின் தளம் ஒவ்வொரு கணமும் தன் கைகளுக்குள் மலர்பவையாகவும் இருக்கக்கூடும். பெண் ஆண் இடையே சமத்துவத்தை அன்று, ஏற்றத்தாழ்வுகளற்ற வேறுபட்ட புரிதல்களை நோக்கி அழைத்துச் செல்லும் இயக்கத்தை முன்மொழியும் கதாபாத்திரங்களைத் தேடி நகரும் கதைகள் இவை. இயக்கங்களுக்குள் பெண் ஆணுக்குள் அடங்குபவை இல்லை, பாலியல் வெளிகளும்அரசியல் ஊக்கங்களும். குடும்பம், காதல், திருமணம், இரத்த உறவுகளுக்கு அப்பால்சமூக உறவுகளால் பிணைந்தெழும்பும் இயக்கத்தைத் தேடும் அறச்சுவடுகளால் ஆனப் பயணங்கள் கொண்டபவை.
இதயநாதம் (Idhaya Nadham) - ந சிதம்பரசுப்பிரமணியன் / N Chidambarasubramanian
ZDP 177
Regular price Rs. 250.00இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் (1944-93)" என்று சொல்கிறார் உ.வே.சா. மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதய நாதம்.
Misplaced Heads - Jayanthi Sankar
ZDP 176
Regular price Rs. 550.00The shift in the time frames, from past to present are seamlessly flowing with respective
characters. The novelist has done dense research in every detail of the repertoire, the training of the
devadasis, and their style. I was awestruck. It was mind-blowing, to think about how she could even
decipher various adavus and various mudras used by us, dancers.
-Kalaimamani Dr. Radhika Shurajit, Dancer, Teacher, Choreographer, Chennai
This fiction is a standing testament that though times have changed immensely, the bare human
emotion towards art and feelings towards fellow human beings remain the same and are truly
eternal. A devadasi of the yesteryear would not fret towards a polygamous institution as much as a
conditioned woman today would. The ironies are brought out gracefully while normalizing many
human emotions, probably considered a taboo by the general public.
- Prathik Sudha Murali, Historian, Teacher, Public speaker, Chennai
In this fabulous post-modernistic, historical fiction with feministic metaphors, the protagonist
Poorna's perspective towards her man reads so much like the modern representation of the temple
a woman married to God.
- - Raaghav Sankar. Banking professional, Singapore
This creative work is very unique in putting together apparently disjointed fragments spanning
centuries and geographical locations and an array of characters from different eras with their quirky
and very specific to times tonality and expressions. The unfolding of the characters and the
experiences of the temple dancer communities bring to the reader an unrivaled perspective of the
honor and dignity of the much-misrepresented class of women.
-Usha Nagasamy, Lecturer in Further Education College, London
The expansive postmodernist novel peopled with over a dozen characters, spanning generations,
different ages, and varying milieus successfully trashes several misconceptions regarding the devadasi
culture in India. It attempts to correct the distorted picture of the system and chronicles the
downfall of devadasis and their rich culture and heritage with the advent of colonial rule.
Without romanticizing them, the author depicts them simply as human beings with their strengths
and flaws.
- Dr. Revathy Sivasubramaniam, Assistant Professor, Chellammal Women’s College, Chennai
Time has memories, it's said. But even time wouldn't be able to depict events spanned across Eras
so beautifully, given a chance. A reader becomes a student as history unveils itself in front of our
bare eyes, yet astonishingly aware of the present as we read about the parallel line of thought that
comes out through the protagonist's experiences. A film scope of South India through medieval,
Islamic, colonial, and the present-day - Misplaced Heads does exactly that, making us delve deeper
into the musings of the human heart and its madness by misplacing our heads.
- Sredhanea Ramakrishnan, an Entrepreneur, Theni, India
With a simple, yet beautiful and fluent language that any reader of any level can engage in, the author
has done commendable, innovative storytelling. With ease, she takes the reader to the ancient eras
and the contemporary modern world that I could visualize the events scene by scene. The reading
experience was strikingly memorable in that sense.
- Bina Amul Subnis, Singapore
Through the pains and sensitivities of the two contemporary protagonists, the author artistically
suggests that the heads are that of women who go misplaced when they want to assert, clarify, and
say no and spell out their views. In Misplaced Heads, one of the best works by female authors,
through the parallel thread of the centuries of temple women she opens windows of deviations that
brought about the decline in their services to ancient art and temples.
- P.Muralidharan, novelist, poet, literary critic and a translator, Chennai
The character-driven tale unfolds with the courage of a rural temple woman of South India during
the early 1900s, looking to break a stranglehold from her place in society. The crisp and clever
narrative smoothly draws readers into the times before and after her. A half-world away, we are
delivered unto the colonial streets of India.
- Krishna Ahir, the author of the novel, The Cat Hunter, Hyderabad
Author: Jayanthi Sankar
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 492
Language: English
Catalina - Sathana
ZDP 175
Regular price Rs. 150.00When we listen to Tchaikovsky’s symphonies, we can visualize snow falling gently on to the
ground. All of Tchaikovsky’s fans have attested to this fact. Similarly while reading Sathana’s
tales, I could feel the ice and slowly drifting snowfall. Such stories have not appeared in Tamil earlier. Each one of these stories in this book is
easily worthy of being converted into world cinema with their themes and incidents. The
stories vividly unspool in front of our eyes even as we are reading them.
-Charu Nivedita
Author: Sathana
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 102
Language: English
அழியாச்சொல் (Azhiyasol) - Kutti Revathi
ZDP 174
Regular price Rs. 290.00மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று
கொண்டேயிருக்கும், இடையறாத நனவெழுச்சி பொங்கிப்பெருகியோடும் ஒரு
கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல்லும்
எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய்
ஆழத்தில் எதிரொளிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு. பெண் உடல்பிம்பம்
உடைபடும் தருணங்களும், அதன் அடியில் இழுபடும் அறுந்திடாத அறத்தின்
கயிறுகளும் நூறாயிரம் அழியாச்சொற்களும் அவளை இடையறாது தனிமையின்
நதியாய் பாய்ந்திடத்தூண்டுகின்றன. ஒரு முறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க
முடியாத பேருவகை வாழ்க்கை. கதையினுள்ளே கதை என்று சுருள் சுருளாய்க்
கதைவெளிக்குள் அழைத்துச்செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீடே
அழியாச்சொல். “அழியாச் சொல்”, குட்டி ரேவதியின் முதல் நாவல்.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 228
Language: Tamil
முறைப்பெண் (Muraipen) - Si. Su. Chellappa
ZDP 172
Regular price Rs. 150.001974இல் சி.சு. செல்லப்பா எழுதிய நாடகம்.
Author: Si. Su. Chellappa
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 112
Language: Tamil
Pattakkadu/பட்டக்காடு-அமல்ராஜ் பிரான்சிஸ்/Amalraj Francis
ZDP 171
Regular price Rs. 599.00வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வர வேண்டியிருந்த பேரிடரையும் புறத்தேயிருந்து பார்த்து, அனுபவித்த ஒரு வரலாற்றுக் கண்ணாடியாக பட்டக்காடு இருக்கும்.
பட்டக்காட்டின் மூலக்கதை உண்மையான சம்பவங்களிலிருந்து கோர்க்கப்பட்டவை. அவற்றில் பல சம்பவங்களை நான் நேரடியாகவே அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில இடங்களில் நானே அப்பாத்திரங்களாகவும் வாழ்ந்திருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அருகிலிருந்து பார்க்கும் வலி கொடியது. அதைப் பட்டக்காட்டின் பல பக்கங்கள் உங்களுக்கு உணர்த்தும்.
-அமல்ராஜ் பிரான்சிஸ்
Author: Amalraj Francis
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 494
Language: Tamil
Nagumo Ley Payale/நகுமோ லேய் பயலே - Selventhiran
ZDP169
Regular price Rs. 135.00நகுமோ லேய் பயலே’ நூலை நாடடங்கு நாட்களில் வாசித்தேன். மொழி, மண், மனிதர்கள், இலக்கியம், குழந்தைகள், குடும்பம், வேலை, புகழ் மயக்கம் என பலவற்றின் பாவனைகளை, அசட்டுத்தனங்களை - உலகின் ஒப்பாரி உள்ளே வந்து விடா வண்ணம், காதவடைத்து உள்ளிருக்கும் சூழலில் - சிரிக்க சிரிக்க வாசிக்க நேர்ந்தது இந்த நாட்களின் இனிய நினைவுகளில் ஒன்று. சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் க்ரிஷ்ணராக வரும் என்.டி. ராமாராவ் சொல்வார் "இறக்கும்போதும் சிரிப்பை விரும்புகிறவன் நான்" ஒரு ஒரிஜினல் சூப்பர் ஹீரோவுக்கான கச்சிதமான பன்ச் டயலாக். அப்படிப்பட்ட விருப்பம் கொண்ட எளிய ஆசாமிகளும் இருக்கக் கூடும். அவர்களுக்கான நூல் இது. - கடலூர் சீனு
Author: Selventhiran
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 108
Language: Tamil
அபிதா (ABITHA) - La.Sa. Ramamirtham/லா.ச. ராமாமிருதம்
ZDP112
Regular price Rs. 120.00அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் ‘உண்ணாமலையம்மன்’.
இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் அபிதாவாய்க் குறுகிய பின், அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = ஸ்பரிசிக்காத, ஸ்பரிசிக்க இயலாத என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன்.
– லா.ச.ரா
Author: L.S Ramamurthy
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 97
Language: Tamil
இரண்டில் ஒன்று (Iandil Ondru) - Selvaraj Jegadeesan
ZDP114
Regular price Rs. 150.00இரண்டில் ஒன்று -செல்வராஜ் ஜெகதீசன்
“கடல் கடந்து வாழும் ஒருவன், தன் இருப்பை, இந்த உலகுக்குச் சொல்ல விழைகின்றன இந்த தொகுப்பின் குறுநாவல்களும், கதைகளும். மனித வாழ்வின் பிரதான சிக்கல்களும் அதன் கடப்பாடுகளும் கால தேசங்களை கடந்தவை என்பதும் வாழ்ந்தே தீர்க்கவேண்டியவை அவை என்பதும் மறுபடி மறுபடி நிரூபணம் ஆகும் கணங்களைச் சொல்ல முயல்பவை இவை.”
Author: Selvaraj Jegadeesan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages:124
Language: Tamil
மாக்பெத் (Macbeth) - William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
ZDP159
Regular price Rs. 350.00ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும், ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும், இதற்கு முன்பே ‘ஹாம்லெட்’ ‘லியர் அரசன்’ என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும், தமிழை இயல்பாக, லாவகமாக, உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள். இவற்றை ஆட்சியோடு கையாளுவதால், ‘மாக்பெத்’ என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக, ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது.
ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள், இடர்பாடுகள், இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார். அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம்; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம்; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம்; அதன் பெருமையை, அதன் சிறுமையைக் காண்கிறோம். பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம். இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு, கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம். இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்.
-பேராசிரியர் அ. சீநிவாசராகவன்
Author: William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 254
Language: Tamil
லியர் அரசன் (King Lear) - William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
ZDP124
Regular price Rs. 420.00தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…
ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இருக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.
லீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்
சொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.
இத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.
– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்
Author: William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 344
Language: Tamil
புது பஸ்டாண்ட் (Puthu Bus Stand) - Satyanandan
ZDP111
Regular price Rs. 230.00செங்கோலைத் தாண்டி இன்றும் தம் அடையாளம் தேடுவோரா தமிழர்? இன்று நாம் ஒர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை, ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர். அவர்களுக்கு விசுவாசமான குறு மன்னர்கள் அவர்களுக்கும் கீழே பெரு நிலக் கிழார்கள் என அதிகார மையங்கள் அனைத்தையும் மக்கள் ஏற்றார்கள். மன்னர்களுக்கு விசுவாசமாகவும் இருந்தார்கள். ஆனால் பண்பாடு,
வழிபாட்டு அடிப்படையில் நாடுகளின் எல்லைகளைக் கடந்து தமிழர் தம் அடையாளத்தைத் தேடி, நிலைநாட்டிக் கொள்ளும் ஒரு மௌனப் போராட்டத்தையும் எப்போதுமே நிகழ்த்தி வந்தார்கள். அது இன்னும்
தொடர்கிறது.
அரசு என்னும் ஒன்று நம் கவனத்தைப் பெறுவதும், அதைச் சார்ந்தே நாம் வாழ்வதும் தொன்று தொட்டே இருந்திருக்கிறது. இனியும் தொடரவும் செய்யும். அரசின் ஒவ்வொரு சிறிய முடிவும் நம்மையும் நமது வாழ்க்கையையும் நமது கனவுகளை வெகு தூரம் பாதிக்கிறது. பல்லவரிடமிருந்து சோழர் ஆட்சிக்கு, திருவள்ளரை (திருச்சி- துறையூர் சாலையில் உள்ள பாடல் பெற்ற வைணவத் தலம்) மாறியபோது அதன் ராஜ கோபுரம் கட்டும் பணி நின்றது. இன்றும் அது நிறைவுறாத
கோபுரமாகவே காட்சி அளிக்கிறது. அந்தக் கோபுரம் நம் தமிழ் மக்கள் பற்றிய நம் புரிதலின் படிமமாகவே நம் முன் இன்றும் நிற்கிறது.
அந்தக் கோபுரம் எழும்பிய காலம், சமகாலம் மற்றும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பின்னான எதிர்காலம்
ஆகிய மூன்றுமே இந்நாவலில் பல்வேறு சாளரங்களை நம்முன் திறக்கின்றன.
Author: Satyanandan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages:182
Language: Tamil
நீருக்கடியில் சில குரல்கள் (Neerukkadiyil Sila Kuralgal) - Prabhu Kalidas
ZDP103
Regular price Rs. 150.00ஆங்கிலத் திரைப்படங்களின் தீவிர விரும்பியான அவர், கதையின் போக்கை அவ்வாறே நகர்த்தியிருப்பது மனப்பதிவுகளின் மீள் என்றே கருதுகிறேன். புகைப்படக் கலைஞராக இயங்குவதிலிருக்கும் நுட்பம் கதையை காட்சிகளாக நகர்த்துவதில் அவருக்கு எளிதாக கைவந்திருக்கிறது. சாரைப்பாம்பின் சரசரப்போடு கதை நகர்கிறது.
அதற்கு அவர் தோது பண்ணியிருக்கும் வார்த்தைகள்
இயல்பான அவரது புழங்குமொழிதான். அந்த மொழியே கதைமாந்தர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்பகப்படுத்துகின்றன.
வெவ்வேறு ஆண் பருவத்தினரான மூவர் சுற்றிய கதை. அவர்களின் வாழ்வியல் நிலைகளை குறிப்பாக வெவ்வேறு பாலியல் களங்களில் காட்சிப்படுத்துகிறது.
கதையில் உலவும் பெண்களின் அபூர்வ வேட்கை பிரபு காளிதாஸின் எழுத்தில் காமலோகத்தை சித்திரப்படுத்தி மலைப்பூட்டுகிறது. மாறுபட்ட சூழலில் பிழைக்கவோ… தப்பிப்பிழைக்கவோ… ஓடிக்கொண்டிருக்கும் மூவரும் ஒன்றுகூடுவதுடன் கதை ஓரிடத்தில் நிலைபெறுகிறது.
– எஸ். அர்ஷியா
Author: Prabhu Kalidas
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 134
Language: Tamil
சி.சு. செல்லப்பா சிறுகதைகள் (Si Su Sellappa Kathaigal) - Si. Su. Chellappa
ZDP101
Regular price Rs. 800.00முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிக்கைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கைக் குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
Author: Si. Su. Chellappa
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 700
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more