Pazhi/பழி  -Ayyanar Viswanth/அய்யனார் விஸ்வநாத்

Pazhi/பழி -Ayyanar Viswanth/அய்யனார் விஸ்வநாத்

Regular price Rs. 220.00
/

Only 1000 items in stock!
தமிழ் புனைக் கதைப் பரப்பில் வெளிப்பாட்டு மொழியில் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்புகள் மிகக் குறைவு. பழியின் மிக அப்பட்டமான மற்றும் துல்லியமான விவரணைகள் இதுவரைக்குமான கதை கூறல் முறையைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மனித இயல்பில் காமமும் வன்முறையும் நிகழ்த்தும் வினைகளே வாழ்வு எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தீரா விளையாட்டை பழியின் கதாபாத்திரங்கள் ஆடிப்பார்க்கின்றன. அவை சாகசங்களாக, மீறலாக, அன்பின் கருணையாக, காமத்தின் பெருந்தீயாக, உடலைத் துண்டுகளாக்கும் குரூரமாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நாவல் தரும் எல்லா உணர்வுகளும் அதன் ஆதாரத்திலிருந்து வேர் விடுவதை வாசிப்பின் வழியே அறிய இயலும். நாம் எதிர்கொள்ளத் தயங்கும் முழு உண்மையின் அசலான முகம் குரூரமாகத்தான் இருக்க முடியும்.