
aratthukku appal neelum atthumeeral/அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்-Aroor Bhaskar/ஆரூர் பாஸ்கர்
Regular price Rs. 260.00
/
இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் குறித்தும் தனி மனித அறம் குறித்துமான கேள்விகளை எழுப்பும் ஆரூர் பாஸ்கரின் இந்நூல் நம்மை ஒழுங்கு செய்துகொள்ளவும், அதன் மூலமாக மெய்நிகர் வெளியில் சுதந்திரமாக உலவுவதற்குமான சாத்தியங்களை உணர்த்துகிறது. இன்றைய காலகட்டத்தில், மெய்யில்லாத மெய்நிகர் உலகில் நாம் கையாள வேண்டிய அறத்தைப் பற்றிய அவசியம் என்ன என்பதற்கான விடையை இந்நூலை வாசிப்பதன் மூலம் நாம் அறியலாம்.
சமூக ஊடகங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆரூர் பாஸ்கருடைய 'சோஷியல் மீடியா- இது நம்ம பேட்டை' என்கிற இன்னொரு நூலையும் வாசிக்கலாம். சமூக ஊடகங்கள் நம்மை ஆளாமல் நாம் அவற்றை ஆள்வது எப்படி என்று எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கும் அக்கறையான கையேடு இது!