Navadharalavadham/நவதாராளவாதம் -A.Marx/அ.மார்க்ஸ் -முன்பதிவு

Navadharalavadham/நவதாராளவாதம் -A.Marx/அ.மார்க்ஸ்

Regular price Rs. 240.00 Sale price Rs. 200.00 Save 17%
/

Only 266 items in stock!
பொதுக்கல்வி, பொது மருத்துவம் என்பன இன்று பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. மெதுவாகத் தொடங்கி இன்று கல்வியும், மருத்துவமும் அதிவேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு என்பதை யாரும் யோசிப்பதில்லை. குழந்தைகள் மத்தியில் ஏழ்மை, சுற்றுச்சூழல் அமைப்பு நொறுங்குதல், டொனால்ட் ட்ரம்ப், நரேந்திரமோடி போன்றோரின் தலைமை உருவாதல் எல்லாம் இன்றைய இந்தப் பொருளாதார அமைப்புடன் இணைந்து பொருந்துவதைக் காண்பது அவசியம். ஆனால் நாம் அப்படியெல்லாம் யோசிப்பதில்லை. இன்று உருவாகும் நெருக்கடிகள், கோவிட் 19 போன்ற பெருந்தொற்றுக்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, எந்த நெருக்கடியும் தனியானவை அல்ல. எல்லாம் ஒன்றுக்கொன்று இறுக்கமான தொடர்புடையவை. இதற்கொரு பெயருண்டு என்பவற்றையும் எண்ண மறுக்கிறோம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு கடந்து போகிறோம்.