NILAMUM POZHUDHUM/நிலமும் பொழுதும் -Nirmal/நிர்மல்

NILAMUM POZHUDHUM/நிலமும் பொழுதும் -Nirmal/நிர்மல்

Regular price Rs. 260.00 Sale price Rs. 220.00 Save 15%
/

Only 324 items in stock!
'இந்தப் பூமி எப்போது உருவானது? எப்படி உருவானது?' என்பது பற்றியும், 'பூமியின் இயற்கை வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?' என்பது பற்றியும் மிகத் தெளிவாக, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கிச் சொல்கிற 'நிலமும் பொழுதும்' என்கிற இந்தப் புத்தகம் அச்சுறுத்தும் பண்டிதர் நடையில் இல்லாமலும், வாசகனை முட்டாளாக நினைத்து அடிமட்ட நடையில் இல்லாமலும், தன் அறிவியல் பயணத்தை, தனது தேடலை, தன் சக நண்பனுடன் ஒரு மழைக்கால மாலையில் தேநீர் அருந்தியபடி இயல்பாக உரையாடும் புதுப் பாணியில் எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பேரண்டத்தின் ஒரே உயிர்க்கோளான நம் பூமியின் இயற்கை வரலாற்றை அனைவருக்கும் எளிதாகப் புரிய வைக்கிற இந்தப் புத்தகம், அறிவியல் கொண்டு ஆன்மீக அனுபவத்தையும் தருகிறது. மேலும், இயற்கையைத் தோழனாகவும், வரலாற்றை வழிகாட்டியாகவும் வாசகர்களின் உணர்வில் கலக்க வைக்கிறது. 'நிலம்', 'வளம்' மற்றும் 'சூழலியல்' சார்ந்த அரசியலுக்கான அடிப்படைப் புரிதலை தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
அறிவியல் பயணமாக ஆரம்பித்தாலும், அந்தப் பயணத்தின் போது கண்களில் படும் இலக்கியம், வரலாற்று நிகழ்வுகள், உலக அரசியல், ஆத்திகம் மற்றும் நாத்திகம் ஆகியவற்றின் போக்குகள் பற்றியும் இந்தப் புத்தகம் உரைக்கும் கருத்துக்கள் யாவும் வாசகர்களுக்கு நிஜமான, சுகமானதோர் பயண அனுபவத்தைத் தரும். மேலும்,  நமது அரசியலையும், கலை நுண்ணுணர்வையும், ஆன்மீக நம்பிக்கைகளையும் இன்னும் செம்மைப்படுத்த நம்மைத் தூண்டுகிற புதினமாகவும் இந்தப் புத்தகம் இருப்பது கூடுதல் சிறப்பு.