Kosu-கொசு/ பா.ராகவன்-Pa.Raghavan

Kosu-கொசு/ பா.ராகவன்-Pa.Raghavan

Regular price Rs. 200.00
/

Only 1000 items in stock!
இந்நாவலில் சித்திரிக்கப்படும் அரசியல், தனது அனைத்து அரிதாரங்களையும் உதிர்த்து, அபூர்வமான நிர்வாணக் கோலம் ஏந்துகிறது. அதனாலேயே இதன் தகிப்பு தாங்க முடியாததாக இருக்கிறது.
***
தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் உண்டாக்கிய தாக்கம் நிகரற்றது. சமூக, கலை, பண்பாட்டுத் தளங்களில் இந்த இயக்கங்கள் பதித்த தடம் முக்கியமானது. அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக இந்நிலப்பரைப்பை ஆளும் வர்க்கமாகவும் இதுவே இருக்கும் சூழலில், எவ்வளவோ மாற்றங்கள், ஏற்றங்கள், வீழ்ச்சிகள். எல்லாம் கலந்ததுதான் சரித்திரம். ஆனால் தொடக்கம் முதல் இன்று வரை மாறாதிருப்பது ஒன்றுதான். அது, இந்த இயக்கங்களைச் சேர்ந்த தொண்டர்களின் நிலை.
***
இந்நாவல், ஒரு தொண்டனின் கதையாக விரிகிறது. அது ஒரு இனக்குழுவின் வரலாறாகவும் உருமாற்றம் கொள்வதை நுணுக்கமான வாசகர்கள் உணர முடியும்.