
Karunamrutha saagara thirattu/கருணாமிர்த சாகரதத் திரட்டு-M.Abraham Pandithar/மு. ஆபிரகாம் பண்டிதர்
Regular priceRs. 500.00
/
- In stock, ready to ship
- Backordered, shipping soon
தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள் - கருணாமிர்த சாகரத் திரட்டு .
தென்னிந்திய சங்கீதத்திற்கு சாகித்தியம் பெரும்பாலும் தெலுங்கில் அமைக்கப்பட்டிருத்தலால், தமிழ் பயிலும் மக்களின் ஆரம்பப் பயிற்சிக்கு அது தடையாயிருக்கிறது. ஆதலால் சங்கீதப் பயிற்சி செய்யத் தொடங்கும் தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய்மொழியில் சாகித்தியம் இருந்தால், எளிதில் சங்கீதம் கற்க உதவியாகும் என்ற எண்ணத்தை மேற்கொண்ட எங்கள் தந்தையார் ஆபிரகாம் பண்டிதர், பெரும்பாலும் தமிழில் சாகித்தியம் இல்லாத கீதங்களுக்கும், சுர ஜதிகளுக்கும் வர்ணங்களுக்கும், எத்துக்கடை சுரங்களுக்கும், கீர்த்தனைகளுக்கும் தமிழில் இலகுவான நடையில் பக்தி ரசம் ஊட்டத்தக்க இனிமையான சாகித்தியங்கள் செய்திருக்கிறார்கள்.
இவ்வுண்மைகளை நன்குணர்ந்த அனேக சங்கீத அபிமானிகளின் வேண்டுகோளுக்கிணங்கி, தமிழறியும் சிறுவர்கள் அடைந்து வரும் சங்கீதப் பயிற்சியின் ஆரம்பத்தில் உண்டாகக்கூடிய சொற்பிழை, சுரப்பிழை, தாளப்பிழைகள் நீங்கி சுத்தபாடம் ஆகும் பொருட்டு, எமது தந்தையார் எங்களுக்குக் கற்பித்த வரிசை ஒழுங்கின்படி, அவர்கள் விருப்பத்திற்கிணங்க, எல்லோரும் எளிதில் சங்கீதம் பயிலும் வண்ணம் வெளியிட்டிருக்கிறோம்.
- ஆ.சுந்தரபாண்டியன் 28-07-1934
- Non-Fiction
- Ezutthu Prachuram
- Tamil